வேட்புமனுவை மறந்த தங்க தமிழ்ச்செல்வன்...மூர்த்தியின் அமைச்சர் பதவி ’ஜஸ்ட் மிஸ்’..சமூக வலைதளங்களில் கிண்டல்

By Ajmal Khan  |  First Published Mar 27, 2024, 2:28 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றோடு முடிவடைவதையொட்டி, தேனி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தங்க தமிழ் செல்வன் வேட்புமனுவை மறந்து வைத்து விட்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வேட்புமனு தாக்கல்- இன்று கடைசி நாள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய இன்றோடு கடைசி நாளாகும், இதன் காரணமாக ஏராளமான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய காலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். இந்தநிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக திறந்த வேனில் நின்றபடியே தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வருகை தந்தார்.அவருடன் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அமைச்சர் மூர்த்தி,கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் ஊர்வலமாக வருகை தந்தனர்.

Tap to resize

Latest Videos

வேட்புமனுவை மறந்த தங்க தமிழ்செல்வன்

பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் முன்பாக பேரணியாக வந்த திமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு,திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அமைச்சர்கள் வந்த 2 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் வேட்பு மனுவுடன் புகைப்படம் எடுக்க செய்தியாளர்கள், கேட்ட போது தான் தனது வேட்பு மனு கையில் இல்லாதது குறித்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு நினைவு வந்தது. தன்னுடைய காரில் வேட்பு மனுவை வைத்திருந்த நிலையில்,தங்கதமிழ்ச்செல்வன் மாற்று காரில் ஏறி வந்ததால் அவர் வந்த வாகனம் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. 

ஜஸ்ட் மிஸ் தப்பிய அமைச்சர் பதவி

இரண்டு கார்களை மட்டும் போலீசார் அனுமதித்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வனின் காரை அனுமதிக்கவில்லை. பின்னர் உடனடியாக தனது உதவியாளரிடம் தனது காரில் உள்ள சென்று வேட்பு மனுவை எடுத்து வருமாறு கூறினார். அமைச்சர்களுடன் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பு மனுக்காக காத்திருந்த நிலையில்,தனது உதவியாளர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று வேட்பு மனுவை எடுத்து வந்தனர்.வந்த பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே தங்கதமிழ் செல்வனை வெற்றி பெற வைக்காவிட்டால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இந்தநிலையில் மூர்த்தியின் அமைச்சர் பதவி ’ஜஸ்ட் மிஸ்’.என சமூக வலைதளத்தில் கிண்டல் அடித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

152 கோடி ரூபாய்க்கு சொத்து.. 10 அடுக்குமாடி குயிருப்பு.. ஆனா கார் மட்டும் இல்லை... மிரளவைக்கும் ஏ.சி.சண்முகம்

click me!