நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாவட்ட ஆட்சியிர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கோவையில் குவிந்த பாஜக தொண்டர்கள்
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவோடு நடைபெறவுள்ளது இதனையொட்டு வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இன்றோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதுவரை சுமாருக்கு 500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் 3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார். அவரை பாஜகவின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்றார்.
அண்ணாமலை வேட்புமனு தாக்கல்
இதனையடுத்து தொண்டர்களின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் தாக்கல் செய்தார்.
போலீசாருடன் வாக்குவாதம்
முன்னதாக கோவை பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு திருமணம் நடைபெற்ற புதுமண தம்பதிகளான கோவைப்புதூரை சேர்ந்த ரவி-தேவிகா தம்பதியினர் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அப்போது வானதி சீனிவாசன் அர்ஜுன் சம்பத் சுதாகர் ரெட்டி உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். இந்தநிலையில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டிடம் அருகே பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்