தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ..2,69,976.00 கடன்... வெள்ளை அறிக்கையில் பகீர் தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Aug 9, 2021, 12:01 PM IST
Highlights

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
 

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்தி 63 ஆயிரம் கடன் உள்ளது வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்தார்.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், ‘’அதிமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைமை இருந்தது. 2020-2021ல் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 61,320 கோடி. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி. எங்கள் கட்சியின் தத்துவம், குணம் ஆகியவற்றை தெரிவிக்க வெள்ளை அறிக்கை. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற  வாக்குறுதியின் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. 

இந்தியாவில் வேறேந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை. தமிழ்நாட்டில் 2006 - 2011 ஆண்டுகளில் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் வருவாய் உபரியாக இருந்தது. இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் கடந்த 5 ஆண்டுகளில் மோசமான பொருளாதார சரிவு. கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம். அதிமுகவின் கையாளாகாத் தனத்தால், ஊழல் நிறைந்த ஆட்சியால் தமிழ் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,69,976.00 கடன் சுமத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார் 
 
 

click me!