ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுறாங்க.. திமுகவை விமர்சனம் செய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்..!

Published : Aug 09, 2021, 11:37 AM ISTUpdated : Aug 09, 2021, 11:48 AM IST
ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை வெளியிடுறாங்க.. திமுகவை விமர்சனம் செய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்..!

சுருக்கம்

இன்று அதிமுக ஆட்சியில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் செய்துள்ளார்.

இன்று அதிமுக ஆட்சியில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்தது. ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் வெள்ளை அறிக்கை வெளியாகவில்லை. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று காலை 11.30 மணிக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்  வெளியிட உள்ளார்.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் கட்சியின் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், நாகை மாவட்ட அதிமுக செயலாளருமான ஓ.எஸ். மணியன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.எஸ். மணியன்;- பொது மக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு செயல்படாமல் தடுத்து மூடிவருகிறது குற்றம்சாட்டினார். 

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிமுக அரசின் நிதிநிலை அறிக்கையை தெரிந்து கொண்ட திமுகவினர், தற்போது ஆட்சி நடத்தமுடியாமல் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்கிறது என விமர்சனம் செய்தார்.

PREV
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!