கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்..! மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் கொடுத்த அறிவுரை..!

By Selva KathirFirst Published Aug 9, 2021, 11:47 AM IST
Highlights

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  அந்த 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளரகள், மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதற்கட்டமாக அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமு தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமா? என்று தான் ஸ்டாலின் கேட்டதாக சொல்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை சதவீத இடங்கள் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் சில முக்கிய தகவல்களைபகிர்ந்து கொண்டதாக கூறுகிறார்கள்.

அடுத்த மாதம் 15ந் தேதிக்குள் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து அந்த 9 மாவட்டங்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கப்படலாம். இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  அந்த 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளரகள், மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதற்கட்டமாக அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமு தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமா? என்று தான் ஸ்டாலின் கேட்டதாக சொல்கிறார்கள்.

அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கண்டிப்பாக நடத்தியே தீர வேண்டும் என்று ஒரே குரலில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான அம்சங்களை நாம் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறோமோ? மக்கள் எப்படி நமக்கு மறுபடியும் வாக்களிப்பார்கள் என்று ஸ்டாலின் கேட்டதாக கூறுகிறார்கள். அதற்கு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி போன்றவற்றை சொன்னபடி செய்ததால் மற்ற வாக்குறுதிகளையும் நாம் விரைவில் நிறைவேற்றுவோம் என்று மக்கள் நம்புவதாகவே அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கூறியுள்ளனர்.

இதனை அடுத்து பேசிய ஸ்டாலின், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உள்ளாட்சித் தேர்தலை இந்த 9 மாவட்டங்களிலும் நடத்தியே தீர வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது. எனவே அனைவரும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும். இந்த 9 மாவட்டங்களிலும் முதற்கட்டமாக ஊரகப்பகுதிகளுக்கு மட்டுமே தேர்தலை நடத்த உள்ளோம். பிறகு தீபாவளிக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த இருக்கிறோம். அந்த வகையில் திமுக ஆட்சி மீதான மக்களின் மனநிலையை பரிசோதிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும். அதற்கு தகுந்தாற்போல் நாம் தயாராக வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அதை விட நாம் நமது கட்சியினருக்குமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நகர்புற உள்ளாட்சித் தேர்தல் என்பதால் உள்ளூர் அரசியலை அடிப்படையாக வைத்து இடப்பங்கீடு செய்து கொள்ளலாம், ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் இத்தனை சதவீதம் என்றெல்லாம் தீர்மானிக்க வேண்டாம், அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள செல்வாக்கின் அடிப்படையில் தீர்மானித்துக் கொள்ளுங்கள், மாவட்டச் செயலாளர்கள் இந்த விஷயத்தில் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறுகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் வட மாவட்டங்கள். அங்கு பாமக – அதிமுக கூட்டடணி வலுவாக உள்ளது. எனவே அதனை முறியடிக்கும் வகையில் வியூகம் வகுக்குமாறும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதாக சொல்கிறார்கள்.

click me!