கடந்த நாட்களாக என்னை பற்றியும், பாமக கட்சியை பற்றியும் சில ஊடகங்கள் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மக்களவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் ராமதாஸ்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போதிய வசதிகள் இல்லாமல், இணைப்புகள் இல்லாமல் அவசர கதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படுவதை நேரடியாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியலுக்காக இதை நான் பேசவில்லை என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவுடன் பாமக கூட்டணி என்பது வதந்தி.. நம்பாதீங்க.. ஒரே போடாக போட்ட அன்புமணி..!
மேலும் பேசிய அவர் காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை என மக்கள் சார்ந்த பிரச்னைகளில் பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. நேர்மையான முறையில் பாமகவை ராமதாஸும் நாங்களும் வழிநடத்தி வருகிறோம். ஆனால், கடந்த நாட்களாக என்னை பற்றியும், பாமக கட்சியை பற்றியும் சில ஊடகங்கள் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். வேண்டுமென்றே யாருடைய தூண்டுதலின் பேரில் பொய்யான அவதூறான செய்திகள் திட்டமிட்டே பரப்பி வருகிறார்கள். இதனை நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லையேல் சட்ட ரீதியாக வழக்குகள் தொடுக்கப்படும் என அன்புமணி எச்சரிக்கை விடுத்தார். ஊடகங்களில் ஒரு சிலர் பாமக கட்சி தற்போதைய தேர்தலில் பேரம் பேசுகிறார்கள், பெட்டியை வாங்கி விட்டார்கள் என அவதூறாக, பொய்யாக பேசி வருகிறார்கள். இது அசிங்கமாக உள்ளது.
இதையும் படிங்க: கரண்ட் இல்லை.. எமெர்ஜென்சி பிளாஷ்பேக்.. திமுகவுக்கு முடிவு - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அதிரடி!
ஒரு சில ஊடகத்துறையினர் ஊடகத்துறையை சார்ந்தவர்களா? அல்லது அரசியல் இடைத்தரகர்களா? என சொல்லும் அளவுக்கு அவர்களின் நடவடிக்கை தரம் தாழ்ந்து இருக்கிறது. பாமக கட்சி மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, நேர்மையாக போராடி வருகிறோம். இது மேலும் தொடர்ந்தால் சட்ட ரீதியாகவும், கிரிமினல் ஆக்ஷனையும் நாங்கள் நிச்சயமாக எடுப்போம். மக்களவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று அன்புமணி கூறினார்.