வன்முறை தூண்டும் RSS பேரணி நடக்கவே கூடாது... தலைமை செயலாளரையே நேரில் பார்த்த தமிமுன் அன்சாரி..

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2022, 4:46 PM IST
Highlights

வன்முறையை தூண்டும் ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழ்நாட்டில் அனுமதிக்ககூடாது என்றும், அதை தடுக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியாள்ளார்.

வன்முறையை தூண்டும் ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழ்நாட்டில் அனுமதிக்ககூடாது என்றும், அதை தடுக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியாள்ளார். சென்ன தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

இதையும் படியுங்கள்: Taj Mahal:Agra: supreme court:தாஜ் மஹாலைச் சுற்றி 500 மீட்டருக்குள் கடைகள் நடத்தத் தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி

காந்தி பிறந்த அக்டோபர் 2 அன்று தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த உயர் நீதிமன்றத்தின் சில நிபந்தனைகளுடன் RSS அமைப்பு அனுமதி பெற்றிருக்கிறது. இது தமிழகத்தில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு IAS அவர்களை நேரில் சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர்  மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று மனு ஒன்றை கையளித்தார்.

இதையும் படியுங்கள்: அதிமுகவை அழிக்க சங்பரிவார்கள் முயற்சி...! எச்சரிக்கையாக இருக்க திருமாவளவன் அட்வைஸ்

அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள் பல  கேள்விகளை முன்வைத்தனர், அவர் கூறியதாவது,  தமிழ்நாட்டில் சமூக ஒற்றுமையை கெடுக்க ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்றும், வன்முறையில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகள், அவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்திகழ்வின்போது மாநிலச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில துணைச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, அசாருதீன், மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் பஷீர் அகமது ஆகியோரும் உடனிருந்தனர்.
 

click me!