தூக்கில் தொங்கிய அமைச்சரின் அண்ணன்.. முதல் ஆளாக ஓடிப்போய் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின். கண்ணீரில் சேகர் பாபு.

By Ezhilarasan Babu  |  First Published Sep 27, 2022, 2:51 PM IST

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன்  மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். 
 


தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன்  மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனனின் உறவினரும் 2001 மற்றும் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமானவர்  சேகர்பாபு. அதிமுகவில் ஒரு சில காரணங்களுக்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார், 2014ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார், கட்சியில் இணைந்த  குறுகிய காலத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கைக்குரியவரானார் சேகர்பாபு.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்:   ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிராக அவரச வழக்கு தொடுத்த திருமாவளவன்.. முடியாது என தூக்கி ஓரம் போட்ட நீதிபதிகள்..

இந்நிலையில் 2022ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆனார். தற்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்து வருகிறார், இவரது சகோதரர் தேவராஜிலு சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார், இந்நிலையில்  அவர் வயிற்று வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் தான் அமைச்சர் சேகர்பாபுவில் அண்ணன் நேற்று மாலை, அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்:  பாஜக கொடிகம்பத்தை பிடுங்கி எறிந்த மாநகராட்சி ஊழியர்கள்.. காவி தொண்டர்கள் 15 பேர் மீது வழக்கு.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், தேவராஜனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர், உடற்கூறு  ஆய்வுக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சரின் உடன் பிறந்த சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில்  ஓட்டேரியில் உள்ள  அமைச்சர் சேகர் பாபுவின் சகோதரர் தேவராஜிலுவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு , நகர்ப்புற வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா , நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி, வீராசாமி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், தாயகம் கவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!