
மதுரையில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளதை எதிர்த்து சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளையில் தொடராப்பட்ட வழக்கில், ஊர்வலத்துக்கு மாற்றுப் பாதையை தேர்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 93 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு நாளை மதுரையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.
இதனை எதிர்த்து கிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், தற்போது ஆர்.எஸ்எஸ்.ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டுள்ள வழியைத் தவிர்த்து , மாற்று வழியை தேர்வு செய்யும் வகையில் , மாநகராட்சி சட்டம்- ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் மனுதாரர் தரப்பை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டம் என்றும், அதில் எடுக்கப்படும் முடிவு குறித்து வரும் 10 ஆம் தேதிக்குள் , நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைப்பதாக இருந்து, பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதிலிருந்து ஜகா வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.