“காந்தி ஜெயந்தி அப்போ RSS பேரணியா? தமிழக மண்ணில் பேராபத்து?” கொந்தளிக்கும் சீமான்!

By Raghupati R  |  First Published Sep 23, 2022, 3:06 PM IST

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று  சீமான் வலியுறுத்தியுள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காந்தி ஜெயந்தியன்று, அவரது படுகொலைக்காகத் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் எனும் மதவாத இயக்கத்தின் பேரணிக்கு மாநிலத்தின் 50 இடங்களில் அனுமதி அளித்திருப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..“டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடி டீம் எடுத்த அதிரடி முடிவு” - அதிமுகவில் பரபரப்பு

மதப்பூசல்களை அனுமதியாது எப்போது அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத்தவறான முன்னுதாரணமாகும். மக்கள் நலனென்பது துளியுமற்று, மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையிலெடுத்து, நாட்டைத் துண்டாடி அதன்மூலம் அரசியல் இலாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பதென்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் பேராபத்தாகும்.

மேலும் செய்திகளுக்கு..ஓர் ஆண்டில் சாதனைகளும், சர்ச்சைகளும்.. ஆளுநர் ஆர்.என் ரவியின் 1 வருட செயல்பாடு எப்படி?

ஆகவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!

click me!