எய்ம்ஸ் 95% பணிகள் முடிவடைந்து விட்டதா.? புல் புல் பறவைகள் மூலம் கட்டப்பட்டதா.? பாஜகவை வெளுத்து வாங்கும் சு.வெ

By Ajmal KhanFirst Published Sep 23, 2022, 2:11 PM IST
Highlights

மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்காமல், டெண்டர் கோரப்படாமல் 95% பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியிருப்பது முழு பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன் தெரிவித்துள்ளார். 

எய்ம்ஸ் பணிகள் முடிவடைந்துவிட்டதா..?

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என அரசியில் கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன. இதன் பலனாக அதிமுக ஆட்சி காலத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட செங்கல் என கூறி பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரம் தமிழக மக்களிடம் வரவேற்ப்பை பெற்றது. இந்தநிலையில் நேற்று தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளதாகவும், மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என கூறியிருந்தார். 

புல் புல் பறவை மூலம் பணிகள் முடிக்கப்பட்டதா..?

இதற்க்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. இதனையடுத்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவுள்ள இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போது எந்த நிலை உள்ளது என கடந்த மாதம் கூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொலைபேசி மூலம் பேசினேன்.விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் கூட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் இடத்தை கடந்த வாரம் நேரடியாக வந்து பார்த்தார். ஆனால் ஒரு வேலை கூட நடைபெறவே இல்லை. ஆனால் நேற்றைக்கு தமிழக வந்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா 95% எய்ம்ஸ் கட்டுமான பணி முடிவடைந்து விட்டது.  விரைவில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.  ஒருவேளை புல்புல் பறவையை அனுப்பி உடனடியாக பணியை முடித்து விட்டார்களோ என்ன நினைக்கவைத்தாக கூறினார்.  எனவே வேலை முடிந்து விட்டதா என்று பார்ப்பதற்காக வந்தோம் ஒரு வேலையும் முடிவடையவில்லை புல் புல் பறவையும் இந்த கட்டிடத்தையும் கட்டவும் இல்லையென கூறினார். 

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது...! அண்ணாமலை

பொய் தகவலை கூறிய நட்டா

புல் புல் பறவை போன்ற பொய்யை சொல்வது தான் பாஜகவின் வேலையாக உள்ளது. 1200 கோடியாக ரூபாய்க்கு மதிப்பீடு செய்து இருந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியானது தற்போது 1900 கோடியாக ரூபாயாகஅதிகரித்துள்ளது.இதற்க்கு ஜெயக்கா ஒப்புதல் அளித்துள்ளது.  இந்த நிலையில் மத்திய அரசு நூறு கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்க வேண்டும் ஆனால் இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படவில்லை. மத்திய அமைச்சர் ஒப்புதல் வழங்காமல் டெண்டர் கோரப்படாமல் 95% பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் பிரதமர் மோடி நாட்டுக்கு மதுரை எய்ம்ஸ் அர்ப்பணிக்க இருப்பதாக கூறுவதும் முழு பொய் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது.! D-வாரிசு M-பணம் K-கட்ட பஞ்சாயத்து இதுதான் திமுக..! இறங்கி அடித்த ஜே.பி நட்டா


 

click me!