
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என திமுக அறிவித்த நிலையில் ரூ.1500 வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்பேட்டியளிக்கையில்;- விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும்.குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் ரூ.1500 வழங்கப்படும் என மகளிர் தினத்தை ஒட்டி, அதிமுக தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மக்கள் மனம் மகிழும் வகையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நிறைய திட்டங்களை அதிமுக அரசு தந்துள்ளது. அதிமுக அறிவிக்கப்போகும் திட்டங்களை முன் கூட்டியே தெரிந்து கொண்டு, திமுக அறிவித்து வருகிறது என விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக அமமுக அணைப்பு இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்கள், மீண்டும் இணைய விரும்பினால் தலைமை முடிவு செய்யும். கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் ஏற்கனவே அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என முதல்வர் கூறியுள்ளார்.