கருணாநிதியை அவமானப்படுத்த ஸ்டாலின் என்று சொன்னாலே போதும்... திமுகவை கிழித்து தொங்கவிட்ட கமல்ஹாசன்..!

Published : Mar 08, 2021, 07:39 PM ISTUpdated : Mar 09, 2021, 10:34 AM IST
கருணாநிதியை அவமானப்படுத்த ஸ்டாலின் என்று சொன்னாலே போதும்... திமுகவை கிழித்து தொங்கவிட்ட கமல்ஹாசன்..!

சுருக்கம்

மக்கள் நீதி மையம் கட்சியின் திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளது என மு.க.ஸ்டாலின் மீது கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

மக்கள் நீதி மையம் கட்சியின் திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளது என மு.க.ஸ்டாலின் மீது கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி சென்னை கிண்டியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்;- மக்கள் நீதி மையம் அறிவித்த திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.4000 கொடுக்கும் திட்டம் வைத்திருந்தோம். நாங்கள் நினைத்ததில் 3 ஆயிரம் ரூபாயை உருவி, ரூ.1000 மட்டும் கொடுப்போம் என்கின்றனர். காப்பி அடிப்பது யாராக இருந்தாலும், முதலில் கூறியது நாங்கள் தான். உங்களால் காப்பி மட்டும் தான் அடிக்க முடியும், நாங்கள் செயல்படுத்துவோம்.

என்னிடம் உள்ள நல்லதை காப்பி அடிப்பதிலும் நல்லத்தனம் வேண்டும். பெண்களின் நலன் பற்றி நிறைய திட்டங்கள் உள்ளன. அதனை அறிவித்தால் காப்பி அடிப்பார்கள். நான் சக்கர நாற்காலி பற்றி பேசி கருணாநிதியை அவமானப்படுத்திவிட்டதாக சொல்கிறார்கள். எனக்கு அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை அப்படி அவரை அவமானப் படுத்த வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் என்று சொன்னாலே போதும் என விமர்சனம் செய்துள்ளார். 

மேலும், பேசிய கமல் தனித்து வாழும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். எந்த பணியை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். புலியை அடித்து துரத்திய வரலாறு கொண்ட பெண்கள், ஓட்டுக்கு பணம் தருவோரையும் அடித்து துரத்த வேண்டும். முறைகேடு செய்யாத நல்ல அரசு அமைந்தால் தமிழகத்தை சிங்கப்பூர் போல் மாற்றிவிட முடியும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!