ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம்; குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500..! அதிமுகவின் அதிரடி அறிவிப்புகள்

Published : Mar 08, 2021, 08:08 PM IST
ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம்; குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500..! அதிமுகவின் அதிரடி அறிவிப்புகள்

சுருக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப்பங்கீட்டை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.

தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அதிமுகவும், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, ஆட்சியை பிடிக்கும் முனைப்பிலும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்; குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்றும் அறிவித்த முதல்வர் பழனிசாமி, குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் அதிமுகவின் திட்டம் கசிந்ததால், திமுக அதை முன்கூட்டியே அறிவித்துவிட்டதாக தெரிவித்தார்.

திருச்சி சிறுகனூரில் நேற்று நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500 என்ற திட்டத்தை ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Mothiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? தொடங்கியது கணக்கெடுப்பு..! பேரு குடுத்தாச்சா?
Rahul Gandhi: சாதி ரீதியான சர்ச்சை பேச்சு? ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு!