ஆர்.கே.நகரில் விறுவிறு வாக்குப்பதிவு…. 9 மணிக்கு 7.32 % வாக்குகள் பதிவு…

 
Published : Dec 21, 2017, 09:38 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
ஆர்.கே.நகரில் விறுவிறு வாக்குப்பதிவு…. 9 மணிக்கு 7.32 % வாக்குகள் பதிவு…

சுருக்கம்

r.k.nagar elction..9 0 clock 7.32 percentage polling

சென்னை ஆர்.கே.நகரில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 9 மணி நிலவரப்படி 7.32 %  வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 1,10,903, பெண் வாக்காளர்கள் 1,17,232, மூன்றாம் பாலினத்தவர் 99 பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 50 மையங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக வாக்கு சாவடிகளுக்கு முன் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் தனது வாக்கினைஇன்று காலை 8.05 மணியளவில்  பதிவு செய்தார்.

சற்றுமுன் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தனது வவாக்கங்ப பதிவு செய்தார், தொகுதி முழுவதிலும் உள்ள 258 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் தங்கன் வாக்குகளை மிகுந்த ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 9 மணி நிலவரப்படி 7.32 %  வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!