
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அப்போது முதல் தபால் ஓட்டு திமுக வேட்பாளரான மருதுகணேஷுக்கு பதிவாகியுள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
இவர்கள் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என ராவும் பகலும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதையடுத்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி சொன்னபடி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
தேர்தலை முறைப்படி நடத்த 15 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படை பாதுகாப்புக்காக வந்திருந்தது.
ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். 1,638 வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஓட்டுப்பதிவு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
இதில், முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. 4 தபால் ஓட்டுக்களில் 1 தபால் ஓட்டு மட்டுமே பதிவானது. அந்த ஓட்டு திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு பதிவாகியுள்ளது.