
கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இன்றும் சற்று நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியவரும்.
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்த நிலையில் அவரது தொகுதியான ஆா்.கே.நகா் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.
இந்த தோ்தலில் 77.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இடைத்தோ்தலில் பதிவாகியிருந்த வாக்குகள் எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது.
14 மேஜைகள் அமைக்கப்பட்டு 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் முன்னணி நிலவரும் தெரியவரும்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவரும்.