ராணி மேரி கல்லூரி முன்பு தள்ளுமுள்ளு… வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் உள்ளே செல்வதில் தகராறு !!

 
Published : Dec 24, 2017, 08:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
ராணி மேரி கல்லூரி முன்பு தள்ளுமுள்ளு… வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் உள்ளே செல்வதில் தகராறு !!

சுருக்கம்

protest in front of rani mary college

ஆர்.கே,நகர் தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்றும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் வேட்பாளர்களின் ஏஜெண்ட்கள் அல்லாத அதிமுகவினரை போலீசார் மையத்துக்குள் அனுமதிப்பதாக குற்றம்சாட்டிய திமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்குப் பதிவு  சாதனங்கள் வைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரிக்கு பலத்த காவல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளா்களின் முகவா்கள், செய்தியாளர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அதிமுகவினரை போலீசார் அனுமதிப்பதாக திமுக மற்றும் தினரகன் ஆதரவாளர்கள குற்றம் சாட்டினர். இதையடுத்து அவர்களும் உள்ளே நுழைய முயன்றதால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!