அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் கைப்பற்றிய நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் வருவாய் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய உள்ளார். அப்போது அதிமுக அலுவலகம் அருகே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பும் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். மேலும் பேருந்து, கார், பைக்குகள் உடைக்கப்பட்டது. இந்த கலவரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் காயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த பிரச்சனையைடுத்து ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.,
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ் அணி
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா...! விதியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றிய இபிஎஸ் அணி
இந்த சம்பவம் இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸக்கு எதிராக குரல் எழுப்பப்பட்ட நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ்சை நீக்கி சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரை நீக்கி உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்தில் இருந்து அனைவரும் வெளியேறும்படி கேட்டுக்கொண்டர். அப்போது ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தில் இருந்து வெளியேறிய நிலையில் திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதையும் படியுங்கள்
எடப்பாடி பழனிசாமி ,கேபி முனுசாமி அதிமுகவில் இருந்து நீக்கம்...! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஓபிஎஸ்