அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ் அணி

By Ajmal Khan  |  First Published Jul 11, 2022, 11:37 AM IST

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி சிறப்பு தீர்மானம் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்டுள்ளது.


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் என தனித்தனியாக பிரிந்துள்ளனர். இந்தநிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இபிஎஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் பொதுக்கழு கூட்டம் நடைபெறும் வானகரத்திற்கு சென்ற நிலையில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டைக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். செல்லும் வழியில் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்உகம் இடையே போதல் ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரும் கற்கள், கட்டைகளால் தாக்கிக்கொண்டர். மேலும் ஏராளமான கார்கள் மற்றும் பைக்குகளும் உடைக்கப்பட்டது. இந்த கலவர சூழ்நிலைக்கு மத்தியில் ஓபிஎஸ் அதிமுக தலைமை அவலுவகத்திற்குள் சென்ற ஓபிஎஸ் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Tap to resize

Latest Videos

இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சென்றவர் அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது இந்த தகவல் பரவியதால் அந்த இடமே பரபரப்புக்குள்ளானது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும் ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படுவார் என்றும் அதற்க்கான தீர்மானம் கொண்டுவரப்படும் எனக்கூறினார்.தொடர்ந்து பேசிய மூத்த நீர்வாகிகள் நத்தம் விஸ்வநாதன், அதிமுகவை அழிக்க ஓபிஎஸ் செயல்படுகிறார்.இவ்வளவு துரோகம் செய்தவர் இனி கட்சிக்குத் தேவையா எனச் சிந்திக்க வேண்டும் என கூறினார்.

இதனையடுத்து அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார். அதில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியின் பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் கொண்டுரவருவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக செயல்பட்ட வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டவர்களையும் நீக்கி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தொண்டர்கள் இவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!