சென்னையில் தொற்று குறைந்தாலும் கட்டுப்பாடுகள் தீவிரம்.. ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 170 கடைகளுக்கு அபராதம்..

Published : Jun 21, 2021, 10:24 AM IST
சென்னையில் தொற்று குறைந்தாலும் கட்டுப்பாடுகள் தீவிரம்.. ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 170 கடைகளுக்கு அபராதம்..

சுருக்கம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக நேற்று ஒரே நாளில் 778 தனி நபர்கள் மற்றும் 170 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக நேற்று ஒரே நாளில் 778 தனி நபர்கள் மற்றும் 170 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா  தொற்று தீவிரமாக இருந்து வரும் நிலையில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

குறிப்பாக,  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத தனி நபர்கள் மீதும் கடைகள் மீதும் தொடர்ச்சியாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை பொது இடங்களில் முககவசம் அணியாதவர்கள், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், வணிக வளாகங்கள் கடைகளில் விதிகளை பின்பற்றாத நபர்களிடமிருந்து 2 கோடியே 46 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவும், பல நடவடிக்கைகள் தினசரி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்திற்காக இன்று ஒரே நாளில் 778 தனி நபர்கள் மற்றும் 170 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஜூலை 17 தேதி முதல் இன்று வரை 3494 தனி நபர்கள் மற்றும் 693 கடைகளுக்கு ஊரடங்கு விதி மீறியதாக சென்னை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி மண்டல ஊரடங்கு அமலாக்க குழு தினமும் திருமண மண்டபத்தை ஆய்வு செய்து வருகிறது. அதன்படி இன்று மட்டும் 94 திருமண மண்டபங்களை அந்தக் குழு ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!