பேருந்து பயணிகளுக்கு உண்மையிலேயே ஒரு மகிழ்ச்சியான செய்தி.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jun 21, 2021, 9:43 AM IST
Highlights

மே மாதம் 1000 ரூபாய் பாஸ் பெற்று இருந்தவர்கள், அதனை ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஊரடங்கு தளர்வில் இன்று முதல் 50 சதவீத இருக்கையுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன,

மே மாதம் 1000 ரூபாய் பாஸ் பெற்று இருந்தவர்கள், அதனை ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஊரடங்கு தளர்வில் இன்று முதல் 50 சதவீத இருக்கையுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பனிமலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து செயல்படலாம் என தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பேருந்துகள் 1800 பேருந்துகள் செயல்படுகிறது என்றும், மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார். 

மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் 200 பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறிய அமைச்சர், அரசு பேருந்துகளில் பெண்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினதை சார்ந்த நபர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு 1200 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளனர் என்றார். அதேபோல் மாற்று திறனாளிகள் மற்றும் மூன்றாம்  பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு அவர்கள் தங்களின் அடையாள அட்டையை காட்டி பயண சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய அமைச்சர்,

மே மாதம் 1000 ரூபாய் பாஸ் பெற்று இருந்தவர்கள், அதனை ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று  அறிவித்தார், மேலும், இரவு 9.30 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என்றார். இந்நிலையில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அதேபோல் மாற்று திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் புதன்கிழமை துவங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

click me!