இட ஒதுக்கீட்டு நாயகர்... மாற்றுக்கட்சித் தலைவரை போற்றிப் புகழும் ராமதாஸ்..!

By Thiraviaraj RMFirst Published Nov 27, 2019, 11:24 AM IST
Highlights

அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை பாதுகாக்க பாடுபடுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என டாக்டர் ராமதாஸ் அறிவிவுறுத்தி உள்ளார்.
 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘’27 சதவிகித இட ஒதுக்கீட்டு நாயகர் வி.பி. சிங் அவர்களின் 11-ஆவது நினைவு நாள் இன்று. அவரது வழியில் பயணித்து அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை பாதுகாக்க பாடுபடுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும்.

பி.எஸ்.எல்.வி-சி 47 ஏவுகலன் மூலம் இந்தியாவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக் கோள் மற்றும் அமெரிக்காவின் 13 செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்! மேலும் சாதனை படைக்க வாழ்த்துகள்!!

அரசு பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு வரை ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கப்படவிருப்பது பாராட்டத்தக்கது. மாணவர்களுக்கு ஆங்கில அறிவும், பேச்சுத்திறனும்  வழங்கப்பட வேண்டியது தான் அவசியமே தவிர, ஆங்கிலவழிக் கல்வி அவசியம் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!