கல்லூரி மாணவிகளை அரசியல்வாதிகளுக்கு விருந்தாக்கிய புகாரில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் நிர்மலா தேவி. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் மிக உயரிய பதவியில் இருப்பவர் பெயர் கூட அடிபட்டது. மேலும் அமைச்சர் ஒருவர் இந்த விவகாரத்தில் அந்த உயரிய மனிதருக்கு உதவுவதாகவும் சொல்லப்பட்டது. இதனால் ஜாமீனில் வெளியே வந்த நிர்மலா தேவி, யாருடனும் பேசாமல் தனது வழக்கறிஞர் மூலமாக வழக்கை நடத்தி வந்தார்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நிர்மலா தேவி மறுபடியும் சிறைக்கு சென்றுள்ளார்.
கல்லூரி மாணவிகளை அரசியல்வாதிகளுக்கு விருந்தாக்கிய புகாரில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் நிர்மலா தேவி. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் மிக உயரிய பதவியில் இருப்பவர் பெயர் கூட அடிபட்டது. மேலும் அமைச்சர் ஒருவர் இந்த விவகாரத்தில் அந்த உயரிய மனிதருக்கு உதவுவதாகவும் சொல்லப்பட்டது. இதனால் ஜாமீனில் வெளியே வந்த நிர்மலா தேவி, யாருடனும் பேசாமல் தனது வழக்கறிஞர் மூலமாக வழக்கை நடத்தி வந்தார்.
திடீரென புத்தி சுவாதீனம் அடைந்தவர் போல காணப்பட்டார். நீதிமன்றத்தில் தர்ணா, தர்காவில் சென்று தகராறு, மொட்டை அடிப்பது, மனநல மருத்துவமனைக்கு செல்வது என நிர்மலாவின் செயல்கள் அனைத்துமே மிகவும் பரபரப்பானது. மேலும் நிர்மலா தேவி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்ள ஆரம்பித்தார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து நிர்மலாவின் வழக்கறிஞர் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டுள்ளார். அதாவது தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் நிர்மலாவை தொடர்ந்து மிரட்டுவதாகவும் இதனால் தான் நீதிமன்றத்தில் ஆஜராகமல் நிர்மலா ஓடி ஒழிவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது நிர்மலாமனநிலை சரியில்லாமல் இருக்கிறார், எனவே அந்த அமைச்சர் பெயரை வெளியிடுவது சரியாக இருக்காது.
ஆனால் விரைவில் நிர்மலா மனதளவில் சரியாக இருக்கிறார் என மனநல மருத்துவரிடம் சான்றிதழ் பெற உள்ளேன். அதன் பிறகு இந்த விவகாரத்தில் நிர்மலாவை மிரட்டும் அமைச்சர் யார், எதற்காக அவர் மிரட்டுகிறார் என்கிற விவரத்தை ஆதாரத்துடன் வெளியிட உள்ளதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.