டெல்லி திஹார் சிறையில் ராகுல், பிரியங்கா... 3 மாதங்களுக்குப் பிறகு ப. சிதம்பரத்துடன் சந்திப்பு!

By Asianet TamilFirst Published Nov 27, 2019, 10:23 AM IST
Highlights

திஹார் சிறையில் இருந்துவரும் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்துவருகிறார்கள். செப்டம்பர் 23 அன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தியும் ப.சிதம்பரத்தை சிறையில் சந்தித்து பேசினார்கள்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் இன்று காலை ப.சிதம்பரத்தை டெல்லி திஹார் சிறையில் சந்தித்து பேசினார்கள்.
 
டெல்லி திஹார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவு கைது செய்தது. பின்னர் அதே வழக்கில் அமலாக்கத் துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்தது. சிபிஐ கைது செய்த வழக்கில், ப. சிதம்பரம் ஜாமின் பெற்றுவிட்டார். ஆனால், அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ப. சிதம்பரத்தால் இன்னும் ஜாமின் பெற முடியவில்லை. ப. சிதம்பரத்தின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளது. 
திஹார் சிறையில் இருந்துவரும் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்துவருகிறார்கள். செப்டம்பர் 23 அன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தியும் ப.சிதம்பரத்தை சிறையில் சந்தித்து பேசினார்கள்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் இன்று காலை ப.சிதம்பரத்தை டெல்லி திஹார் சிறையில் சந்தித்து பேசினார்கள்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்துவருகிறார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு ராகுலும் பிரியங்காவும் ப.சிதம்பரத்தை சிறையில் சந்தித்துள்ளார்கள்.

click me!