தோற்றுப் போன சாணக்கியர் !! அமித்ஷாவை கலாய்க்கும் தேசியவாத காங்கிரஸ்…. நெட்சன்கள் !!

By Selvanayagam PFirst Published Nov 27, 2019, 9:27 AM IST
Highlights

மகாராஷ்டிரா அரசியலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தான் சாணக்கியர்களின் சாணக்கியர் என்றும், பாஜக தலைவர் அமித்ஷா ஒரு தோற்றுப் போன சாணக்கியர் என்றும் ன அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இரவோடு இரவாக நிலைமை தலைகீழாக மாறியது.
 
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகனும் கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவருமான அஜித் பவார் மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியமைக்க தனது ஆதரவை தெரிவித்தார். 

இதையடுத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் பட்னாவிஸ் முதலமைச்சராகவும் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும்  பதவி ஏற்றனர். இந்த சம்பவம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த நடவடிக்கைகள் பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான  அமித் ஷா-வின் அரசியல் சதுரங்கத்தால் தான் நிறைவேறியது என சமூக வலைதளங்களில் பரவலான கருத்துக்கள் நிலவியது. 

அவரை ஒரு அரசியல் சாணக்கியர் என்ற ரேஞ்சுக்கு சமூக வலைதள வாசிகளும், பாஜகவினரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். இதையடுத்து  இந்திய அரசியலின் சாணக்கியர் அமித் ஷா என்ற ஹேஷ்டேக் வேகமாக பரவியது.

ஆனால்  மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பாஜக மாநில சட்டசபையில் நாளை நிரூபிக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு வெளியாகி சில மணி நேரங்களிலேயே முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், மகாராஷ்டிரா அரசியலில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர்  தான் பதவி ஏற்ற 80 மணி நேரத்திலேயே அந்த பதவியை விட்டு விலகிய மோசமான சாதனையை பட்னாவிஸ் படைத்துள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி 4 நாட்களிலேயே கவிழ்க்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த  தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களில் ஒருவரான நவாப் மாலிக் , ‘மகாராஷ்டிராவின் சாணக்கியரான தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் மற்ற சாணக்கியர்களை தோற்கடித்துள்ளார்’ என தெரிவித்தார். அதாவது பாஜக தலைவர் அமித்ஷாவை தோற்கடித்து விட்டார் என்றும், அவர் சாணக்கியர்களுக்கெல்லாம் சாணக்கியர் என்றும் பாராட்டினார்.

இதே போல் சமூக வலைதளங்களிலும் தோற்றுப் போன சாணக்கியர் என்று அமித்ஷாவை நெட்சன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

Like
#மண்டியிட்டஅமித்ஷா   
1.     ப.தமிழ்ச்செல்வன்‏ @tamilselvancp 10h10 hours ago

More
ஜன்டா #மண்டியிட்டஅமித்ஷா
0 replies0 retweets5 likes

Replying to @bbctamil
நாங்க ஆரம்பத்தில் இருந்தே ஜனநாயக படுகொலை ன்னு தான் சொல்லி கிட்டு இருக்கிறோம் , நீங்க தான் சாணக்யா சரண்யா ன்னு சொல்லி கிட்டு இருக்கீங்க
More


Replying to @bbctamil
#பிஜேபி செயல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.. இதே வேகத்தை நாடு முன்னேற காட்டியிருந்தால் நன்மை தரும்.. இது கேலி கூத்து என்பது உண்மை.

click me!