மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை மறுநாள் பதவிஏற்பு: தாக்கரே குடும்பத்தில் இருந்து வரும் முதல் முதலமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Nov 26, 2019, 11:26 PM IST
Highlights


மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே டிசம்பர் 1-ம் தேதி பதவிஏற்கஉள்ளார். தாக்கரே குடும்பத்தில் இருந்து மாநிலத்தில் முதல்முறையாக உத்தவ் தாக்கரே முதல்வராகிறார்.

மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றார்.

சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் மூன்றும் சேர்ந்து பெரும்பான்மைக்குத் தேவையான 145 எம்எல்ஏக்களுக்கு அதிகமாக வைத்திருந்தும் அவர்களை ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. 

ஆனால், 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.ஆளுநர் கோஷ்யாரியின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

இந்த மனு மீது இரு நாட்களாக விசாரணை நடந்தது .இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. அதில், "நாளை மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது" என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை அறிந்த துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சிலமணிேநரத்தில் முதல்வர் பதவியை தேவேந்திர பட்னவிஸும் ராஜினாமா செய்தார். 

இதையடுத்து மாநிலத்தின் அடுத்த முதல்வராக பதவிஏற்க சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை ஆளுநர் கோஷியாரி அழைத்துள்ளார்
இதையடுத்து, நாளை மறுநாள்  மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். மும்பை சிவாஜி பூங்காவில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. சிவசேனா கட்சி தொடங்கிய 1966-ம் ஆண்டில் இருந்து தாக்கரே குடும்பத்தில் நேரடியாக தேர்தல் கள அரசியலுக்கு வந்தது இல்லை.

முதல் முறையாக இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அவருக்குப்பின் தற்போது உத்தவ்தாக்கே முதல்வராக உள்ளார். 

உத்தவ் தாக்கரே எம்எல்ஏ  ஆக இல்லாத காரணத்தால் அவர் முதல்வர் பதவி ஏற்ற 6 மாத காலத்துக்குள் ஏதாவது தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற வேண்டும். 

அந்த வகையில் தனது தந்தைக்காக வோர்லி தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ஆதித்யா தாக்கரே ராஜினாமா செய்வார் எனத்தெரிகிறது
1960-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி மும்பையில் பிறந்த உத்தவ் தாக்கே தனது தந்தை பால் தாக்கரே மறைவுக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு சிவசேனா கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார்.

 கடந்த 199-ம் ஆண்டு மகாராஷ்டிரா முதல்வராக இருந்த சிவசேனாவின் நாராயண் ரானேவின் நிர்வாகத்திறன், நிர்வாகம் ஆகியவற்றை வெளிப்படையாக உத்தவ் தாக்கரே விமர்சித்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாராயணம் ராணே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 2002-ம் ஆண்டு மும்பை மாநகராட்சித் ேதர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனாமுதல்முறையாகப் போட்டியிட்டு அபாரமான வெற்றி பெற்றது.

click me!