அடுத்த 5 வருஷத்துக்கு நாங்கதான் முதலமைச்சர் !! சிவசேனா அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Nov 26, 2019, 11:13 PM IST
Highlights

மகாராஷ்டிராவில்  அடுத்த 5 ஆண்டுகள் உத்தவ் தாக்கரேவே முதலமைச்சராக இருப்பார் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக நேற்று ஆளுநர் மாளிகை சென்ற அந்த 3 கட்சிகளின் பிரதிநிதிகள், ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் விலகி இருக்கும் நிலையில், சிவசேனா தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகள் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தான் முதலமைச்சராக இருப்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய அஜித் பவார் தங்களுடனே இருப்பதாக அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் பகிர வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியதால் தான் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அதே போன்று சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி பகிரப்படாலாம் என்று கருதப்பட்ட நிலையில், சஞ்சய் ராவத்தின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

click me!