அஜித் திமுக (அதிமுக) என்ற பெயரில் கட்சி தொடக்கம்... உள்ளாட்சித் தேர்தலில் அதகளப்படுத்தும் மதுரைவாசி!

Published : Nov 26, 2019, 10:15 PM IST
அஜித் திமுக (அதிமுக) என்ற பெயரில் கட்சி தொடக்கம்... உள்ளாட்சித் தேர்தலில்  அதகளப்படுத்தும் மதுரைவாசி!

சுருக்கம்

தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சியும் அதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளன.  இந்நிலையில் மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் ரைட் சுரேஷ் என்பவர் அஜித் திமுக (அதிமுக) என்று குறிப்பிட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.  

மதுரையில்  நடிகர் அஜித் பெயரில் அதித் திமுக (அதிமுக) என்று குறிப்பிட்டு உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச் சேகரிப்பில் ஓர் இளைஞர் ஈடுபட்டுள்ளார்.


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்  நடைபெறுவதற்கான பணிகள்  நடைபெற்றுவருகின்றன. உள்ளாட்சித் தேர்தல் ஜனவரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதியை தெரிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு கட்சியும் அதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளன.  இந்நிலையில் மதுரை மாநகர் மேயர் வேட்பாளராக போட்டியிட இருக்கும் ரைட் சுரேஷ் என்பவர் அஜித் திமுக (அதிமுக) என்று குறிப்பிட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.


இதுதொடர்பாக பிரம்மாண்டமாக போஸ்டர்களை அடித்து மதுரையெங்கும் வீதிகளில் ஒட்டி சுரேஷ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “தேர்தலில் ஒரு சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு” என்று கடந்த ஆண்டு நடிகர் அஜித்குமார் அதிரடியாகக் கூறியிருந்தார். இ ந் நிலையில் அஜித் பெயரையும் அவருடைய புகைப்படத்தையும் போட்டு அஜித் திமுக என்ற பெயரில் குறிப்பிட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?