பேரறிவாளன் போல எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்யுங்கள்... வைகோ வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published May 19, 2022, 3:17 PM IST
Highlights

பேரறிவாளனை விடுதலை செய்தது போல மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

பேரறிவாளனை விடுதலை செய்தது போல மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு விடுதலை அளித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொது செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர், பேரறிவாளனுக்கு தூக்கு என்ற உடன் நேரடியாக வேலூர் சிறைக்கு சென்று அவரை மிகுந்த நம்பிக்கை உடன் இருக்க சொல்லி தெரிவித்தேன்.

இளமை காலம் முதலே எங்கள் வீட்டிக்கு வருபவர் பேரறிவாளன். அவர் நிரபராதி அவருக்கு  விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.அவரது அம்மா அற்புதம்மாள் தனது மகனை போராடி மீட்டுக் கொண்டு வந்து உள்ளார்.  பேரறிவாளன் போல மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும். மேலும் அவர் எந்த குற்றமும் செய்யாதவர். இதில் நீதி வென்றது. அவர் வாழ்வு மற்றும் இளமை காலம் அழிந்து விட்டது. யாராக இருந்தாலும் சோர்ந்து போய்டுவார்கள். ஆனால் எமன் வாயில் இருந்து தன் மகனை மீட்டு உள்ளார் அற்புதம்மாள்.

அவரை தொடர்ந்து பேசிய பேரறிவாளன், நான் சிறைக்கு போகும் முன்பே வைகோவை சந்தித்து உள்ளேன். பொடா  காலத்தில் வைகோ அண்ணணுடன் இருந்த போது அது ஒரு மகிழ்ச்சியான தருணம். தூக்கு என்ற போது எங்களுக்காக அத்வாணி மற்றும் வாஜிபாயியிடன் மனு கொடுத்தார். எங்களுக்கு தூக்கு என்று அறிவித்த போது ராம்ஜித்மலாணி இந்த வழக்கில் வந்த போது தான் இந்த வழக்கு மாற்றத்தை அடைந்தது. அவர் வந்ததுக்கு முழு காரணம் வைகோ தான் என்று தெரிவித்தார். முன்னதாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் குடும்பத்துடன் சந்தித்து நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!