இது சும்மா டிரெய்லர் தாம்மா.. மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு.. பாஜகவை அலறவிடும் முதல்வர் ஸ்டாலின்.!

Published : May 18, 2022, 09:01 AM ISTUpdated : May 18, 2022, 09:02 AM IST
இது சும்மா டிரெய்லர் தாம்மா.. மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு.. பாஜகவை அலறவிடும் முதல்வர் ஸ்டாலின்.!

சுருக்கம்

ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். அத்தகவல்கள் நூலாக்கம் பெற்று ஆவணமாகியுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய  புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல், கோயில்களின் மேம்பாட்டுக்கும், பக்தர்களின் நலனுக்காகவும் முனைப்புடன் செயல்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் அன்றாட சாதனைகளை நாள்தோறும் மக்கள், அனைவரும் அறியும் வண்ணம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.  முதன்முதலாக, சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சொத்துக்கள் 6.6.2021 அன்று மீட்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களின் சொத்துக்கள் வெகு விரைவாக மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.2,043 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகச் சமீபத்தில் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட அனைத்தையும் தொகுத்து அழியாத ஆவணங்களாக அச்சுப் பிரதிகளாக அனைவரும் அறிந்து கொள்வதற்காக வெளிப்படைத் தன்மையுடன் இந்நூல் வெளியிட முடிவு செய்தது. அதன்படி, சென்னை, தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட கோயில் சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெற்றுக் கொண்டார். இந்நிலையில்,  இது தொடக்கம்தான்! எஞ்சியுள்ள கோயில் சொத்துகளையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கோயில் நிர்வாகங்களிடம் ஒப்படைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். அத்தகவல்கள் நூலாக்கம் பெற்று ஆவணமாகியுள்ளன. இது தொடக்கம்தான்! எஞ்சியுள்ள கோயில் சொத்துகளையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுக் கோயில் நிர்வாகங்களிடம் ஒப்படைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!