பெரியார் இருக்க சாவர்க்கார் எதற்கு? தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீங்க.. அலறும் ஜிக்னேஷ் மேவானி.!

Published : May 18, 2022, 07:20 AM IST
பெரியார் இருக்க சாவர்க்கார் எதற்கு? தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீங்க.. அலறும் ஜிக்னேஷ் மேவானி.!

சுருக்கம்

ஒரு தலித் இல்லாத சாதியினர் தீண்டாமையை பின்பற்றும் போது அவர்களின் கஷ்டம் தெரியும். மதம் மற்றும் சாதி ஒன்றிணைந்த ஒன்று. அதை எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜக காலூன்ற வேகமாக செயல்படுகிறது. அவர்களை வர விடாதீர்கள. தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள். அதன் கொடுமை தங்களுக்கு நன்றாக தெரியும்.

தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள். அதன் கொடுமை தங்களுக்கு நன்றாக தெரியும்  என குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத்தவர் பிரிவின் சார்பாக எழுதப்பட்டுள்ள ‘தலித் உண்மைகள்’ என்ற புத்தகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை, குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி;- ஒரு தலித் இல்லாத சாதியினர் தீண்டாமையை பின்பற்றும் போது அவர்களின் கஷ்டம் தெரியும். மதம் மற்றும் சாதி ஒன்றிணைந்த ஒன்று. அதை எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் பாஜக காலூன்ற வேகமாக செயல்படுகிறது. அவர்களை வர விடாதீர்கள. தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்கள். அதன் கொடுமை தங்களுக்கு நன்றாக தெரியும். ஆகையால் தமிழகத்திற்கு சாவர்கார் தேவையில்லை, பெரியாரை கொண்டாடுங்கள் என்று  ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

மேலும், சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு படிநிலையும் அழிக்கும் ஒன்று. பாஜக  மற்றும் ஆர்.எஸ். எஸ் இயக்கம் முழு சர்வாதிகார இயக்கம். தலித் மக்களை காப்பதற்கு நாம் அனைத்தையும் செய்ய வேண்டும் என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!