ஆடிட்டர் குருமூர்த்தி மீதான புகார்.. ஆறப்போட்ட அதிமுக.. அதிரடி காட்டிய திமுக..!

By vinoth kumarFirst Published Oct 28, 2021, 2:40 PM IST
Highlights

சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி பேசும்போது, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் வாதிகளால் நியமிக்கபட்டவர்கள். யார் மூலமாவது, யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர். இது வருத்தபட வேண்டிய விஷயம். 

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் பத்திரிக்கையின் தற்போதைய ஆசிரியர் குருமூர்த்தி பேசும்போது, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் வாதிகளால் நியமிக்கபட்டவர்கள். யார் மூலமாவது, யார் காலையோ பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர். இது வருத்தபட வேண்டிய விஷயம். ஊழல் செய்பவர்களை நீதிமன்றங்கள் தண்டிப்பது இல்லை. எனவே, தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இதுபோன்று நடைபெறாது என்று பேசியிருந்தார். 

இதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அப்போதைய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடம் மனு அளித்தார். அதில் துக்ளக் பத்திரிக்கையின் 51வது ஆண்டு விழாவில் நீதித்துறையும் நீதிபதிகளையும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க;- அதிமுகவில் சசிகலா? ஓபிஎஸ் சொன்னதில் எந்த தவறும் இல்லை.. ஆதரவு கரம் நீட்டும் செல்லூர் ராஜூ..!

 ஆனால் அந்த மனுவை அப்போதைய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நிராகரித்துவிட்டார். இந்நிலையில்,  ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து எனது மனுவை நிராகரித்து அட்வகேட் ஜெனரல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தங்கள் தரப்பிடம் உரிய விசாரணை நடத்தப்படாமல் அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக வழக்கறிஞர் எஸ்.துரைசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், இதற்கு முன்பு இருந்த அட்வகேட் ஜெனரல் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும், வழக்கறிஞர் எஸ்.துரைசாமியின் மனு மீது மீண்டும் நவம்பர் 11ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

கடந்த அதிமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக குருமூர்த்தி எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அப்போதைய அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல அதிமுக தலைமை ஆண்மையற்றவர் என்று குருமூர்த்தி அவமரியாதை செய்த போது அதிமுகவினர் கொந்தளித்தனர். 

இதையும் படிங்க;-சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி ஓபிஎஸ் பேசியது சரிதான்.. அதகளப்படுத்தும் ஜே.சி.டி.பிரபாகர்..!

அதன் பிறகும் குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு காரணம் பாஜகவுடன் நெருக்கமாக இருந்தது மட்டும் அல்லாமல் அதிமுக தலைவர்கள் உட்கட்சி ரீதியாக அவரிடம் ஆலோசனை செய்து வந்தனர். குறிப்பாக ஓபிஎஸ் குறித்து பொதுமேடையிலேயே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட இக்கட்டான அந்த சமயத்தில் தமிழகத்துக்கு திசை காட்டியது நான் தான். சசிகலாவை முதல்வராக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் என்னைச் சந்தித்துப் புலம்பினார். அப்போது, அவரிடம் நான் பேசிய விதம் குறித்து இங்கு பகிர்ந்துகொள்ள முடியாது. அவரை ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்தேன். அதற்கு பிறகு தமிழகத்தில் காட்சிகள் மாறின. இரண்டாகப் பிரிந்து கிடந்த அதிமுகவை இணைத்ததில் எனக்கு பங்குண்டு என்றார். 

எனவே கடந்த ஆட்சியில் குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிமுக அரசு தயங்கியது. ஆனால், திமுக பதவியேற்று 5 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் குருமூர்த்தி மீதான வழக்கு மீண்டும் தூசிதட்டப்படுகிறது. 

click me!