எடப்பாடியை கட்சியில் இருந்து நீக்குங்கள்... சசிகலா விஷயத்தில் ஏமாற்றினால்... ஓ.பி.எஸுக்கு கடும் நெருக்கடி..!

By Thiraviaraj RMFirst Published Oct 28, 2021, 1:16 PM IST
Highlights

தேவர் குருபூஜைக்கு போய்விட்டு வருவதற்காக சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி சொல்லி ஏமாற்றினால் அது ஓ.பி.எஸூக்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தும்

தேவர் குருபூஜைக்கு போய்விட்டு வருவதற்காக சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி சொல்லி ஏமாற்றினால் அது ஓ.பி.எஸூக்கு பெறும் பின்னடைஅவை ஏற்படுத்தும் என பெங்களூரு புகழேந்தி எச்சரித்துள்ளார். 

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தேசியமும், தெய்வீகமும் எனது கண்கள். ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கு வெற்றி பெற்று சென்றவர். தனது சொத்துக்களையெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கொடுத்து அழகு பார்த்தவர். தேவர் ஐயாவை பற்றி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அந்தத் தலைவருடைய குருபூஜை 30ஆம் தேதி பசும்பொன்னில் காண இருக்கிறோம்.

அன்றைய தினம்அங்கே தலைவர்களெல்லாம் கூடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கே ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சென்ற முறை நடந்த செயற்குழுவில் பொதுக்குழுவிலும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடைய பெயரை சூட்டு வரவேண்டுமென்று அதிமுக செயற்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தமிழகத்திற்கும் பிற மாநிலங்களிலும் அறிவித்திருந்தோம். அதன் பிறகு அதை பற்றி யோசித்திருக்கிறீர்களா? என்றால் அதைப்பற்றி எந்த கேள்வி முறையும் இல்லை. 

எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த வருடம் பசும்பொன் ஐயா அவர்களின் இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தப் செல்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்தபோது அவர் சொன்னதை மறந்து இருப்பார் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் மாற்றாக யோசித்து தென்மாவட்டங்களில் அதிமுக தோற்கட்டும். பன்னீர்செல்வத்தை காணாமல் ஆக்க வேண்டும் என்ற காரணத்தால் தேவர் பெயரை சூட்டாமல் விட்டுவிட்டு இருக்கலாம். இதெல்லாம் அதிமுக மீது தென்மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஒரு சாராருக்கு 10.5% இட ஒதுக்கீடு. இருக்கட்டும். நான் இதை குறை சொல்லவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலினை நான் மனதார பாராட்டுகிறேன். ஏனென்று கேட்டால் அவர்கள் மருது சகோதரர்களுக்கு சிலை வைப்பேன் என்று சொன்னார்கள். நாவலருக்கு சிலை வைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

 அனைத்திந்திய அண்ணா திமுக சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இனி அக்கட்சியால் செய்யாது. இன்றைக்கு கட்சியில் சாதாரண நிலையில் இருக்கக்கூடிய ஒரு ஆட்கள் கூட ஓ.பி.எஸ் அவர்களை மதிப்பதில்லை. கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர். அவர் சொல்வது தான் சட்டம். அவர் சொல்வதை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு இருக்கிற சாதாரண மனிதர்கள் எல்லாம் அவரை குறைவாக பேசுகிறார்கள். கே.பி.முனுசாமி செத்துப் போய் விடுவேன் என்கிறார். அவர் நல்லபடியாக இருக்கட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர் உயிரோடு இருக்கும்போதே ஒரு ராஜ்யசபா எம்பி திமுக வசம் சென்றுவிட்டது.

இப்போது சசிகலா அதிமுகவுக்கு வந்து விட்டால் நான் செத்து விடுகிறேன் என்கிறார். திமுக 133 இடங்களில் வெற்றி பெற்றது. நீங்கள் அதுபோல ஏதாவது ஒரு முடிவெடுத்து விட்டால் திமுக வசம் 134 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். அனைவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும். சசிகலாவும் அதிமுகவில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஜெயக்குமார் ஒரு அரசியல் பபூன். ஜெயக்குமார் ஓபிஎஸுக்கு எதிராக இருந்து பணியாற்றுகிறார். ஒரு சாதாரண மாவட்ட செயலாளரும் ஓ.பி.எஸை எதிர் பேசுகிறார். பிறகு முனுசாமி. இந்த மூன்று, நான்கு பேரும் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்கள்.

சரியான முடிவெடுக்க வேண்டிய தருணத்திலே சரியான முடிவுக்கு முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் சரியான பாதையில் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் சென்று கொண்டு இருக்கிறார். இனியும் பின் வாங்கினால் அதை பற்றி பேசி பிரயோஜனம் இல்லை. ஓ.பி.எஸ் சரியான முடிவு எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியை கட்சியில் இருந்து நீக்குவதற்கு அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு எல்லா விதமான உரிமையும் உண்டு. இரட்டை இலை சின்னமே மதுசூதன், ஓ.பி.எஸ், செம்மலைக்கு வழங்கப்பட்டது தான். 

இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் இடம் இருந்ததால்தான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் ஓபிஎஸை சேர்த்துக்கொண்டார். இப்போது ஓபிஎஸை வெளியேற்றுவதற்காக அனைவரையும் தூண்டிவிட்டு பேசச் சொல்கிறார். இனியாவது ஓபிஎஸ் எச்சரிக்கையாக இருப்பார் என்று நம்புகிறேன். அதிமுக எனும் கட்சி சசிகலா உடையதுதான். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பொறுப்பை கொடுத்து ஆட்சியில் அமர்த்தியது சசிகலா தான். நான் நியாயத்தை பேசுகிறேன். சசிகலா கூட இருந்து பேசவில்லை.

கட்சியின் தலைமையான ஓ.பி.எஸ் இன் கட்டுப்பாட்டில்தான் எடப்பாடி இருக்க வேண்டும். அதைவிடுத்து மாறாக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் ஓபிஎஸ் இருந்தால் நிலைமை தலைகீழாகி விடும். கட்சியில் எடுக்கும் முடிவை ஓபிஎஸ்தான் எடுக்க வேண்டும். குரு பூஜை முடிந்ததும் இந்தக் கருத்தில் அப்படியே பின் வாங்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்தால் அதனை   தூர எறிந்து விடுங்கள். அதற்குப் பிறகு தென்மாவட்டம் நம்மை மன்னிக்காது. அதிமுக இப்போதே பத்து பதினைந்து சீட்டுகள் தான் பிடித்திருக்கிறது. 


நிலைமை இன்னும் மோசமாகிவிடும். தேவர் குருபூஜைக்கு போயிட்டு வருவதற்காக சசிகலா பற்றி சொல்லி ஏமாற்றினால் அடுத்து வெற்றி பெற முடியாது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும். சசிகலா இணைந்து செல்ல வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

click me!