அரசு வரிகளை உயர்த்துவது தவறில்லை அதற்கான அவசியம் உள்ளது. ஆனால், ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். கடந்த முறை எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது எதையெல்லாம் எதிர்த்து போராட்டம் செய்தாரோ தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு அந்தர் பல்டி ஆகாச பல்டி அடித்து அதையெல்லாம் செய்கிறார்.
இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால், மற்றவர்களோடு நாங்களும் தோளோடு தோள் கொடுத்து எதிர்ப்போம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் சென்னை ராஜாஜி சாலையில் அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- அரசு வரிகளை உயர்த்துவது தவறில்லை அதற்கான அவசியம் உள்ளது. ஆனால், ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். கடந்த முறை எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது எதையெல்லாம் எதிர்த்து போராட்டம் செய்தாரோ தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு அந்தர் பல்டி ஆகாச பல்டி அடித்து அதையெல்லாம் செய்கிறார்.
இதையும் படிங்க;- துரைமுருகனின் துச்சாதனன் புத்தி இன்னும் மாறவில்லை.. தெலுங்கு பட வில்லன் போல பேசும் பொன்முடி.. TTV விளாசல்.!
ஆணவத்துடன் பேசும் அமைச்சர்களை துக்கி அடிக்க வேண்டும். ஆனால் அச்சப்படுகிறார். பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து விட்டு அவர்களது கணவர்கள் பினாமி போல் செயல்படுகின்றனர். மடியில் கணம் இருப்பதால் பயந்து கொண்டு, மதத்தைப் பற்றியும் தேவையில்லாத விவகாரங்கள் குறித்தும் பேசி திசைதிருப்ப திமுக முயல்கிறது.
உலக நாடுகள் அனைத்தும் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் இந்தியாவும் பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாகவும் இதற்கு மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இனி அதிமுகவுடன் ஒன்றாக இணைவதில் அவர்களுக்கும் எங்களுக்கும் நல்லதல்ல. ஆனால் திமுகவை வீழ்த்த, அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணியில் பங்குபெற அமமுக தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் எந்த திணிப்பையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது மத்தியில் ஆள்பவர்கள் தெரியும். அதிமுகவில் உள்ள ஒரு சிலரின் ஆணவப் போக்கால், பயத்தால், மோசமான நிலையில் இருக்கிறார்கள் அவர்கள் திருந்தினால் நல்லது என்று டிடிவி.தினகரன் கூறினார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் மகனின் எம்.பி. பதவிக்கு ஆபத்து? ரவீந்திரநாத்தின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி..!