பொய்யான தகவலை வெளியிடுவதா.? நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.? அண்ணாமலைக்கு சவால் விட்ட கொங்கு ஈஸ்வரன்

By Ajmal Khan  |  First Published Oct 30, 2023, 10:02 AM IST

பொய்யான செய்திகளை திருச்செங்கோட்டில் பேசிய அண்ணாமலை அவர்கள், அவருடைய சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம் அல்லது என்னிடத்திலேயே நேரடியாக பேசியிருக்கலாம். ஒரு தேசிய கட்சியினுடைய மாநில தலைவர் நேர்மையாக பேச வேண்டாமா என கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். 


அண்ணாமலைக்கு கண்டனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்செங்கோட்டில் நடைபயணத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் செயல்பாடுகளை விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினம் பாதயாத்திரையாக திருச்செங்கோட்டிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் சட்டமன்ற உரைகளைப் பற்றி விமர்சித்து இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். சட்டமன்ற உரை என்பது மேடைப்பேச்சு போல் அல்ல. பேசிய எல்லாவற்றையும் ஒரு வார்த்தை விடாமல் ஆவணப்படுத்தப்பட்டு சட்டமன்ற நூலகத்தில் இருக்கிறது. அதை எப்போது வேண்டுமென்றாலும் படிக்க முடியும். 

பொய்யான செய்திகளை வெளியிடுவதா.?

பொய்யான செய்திகளை திருச்செங்கோட்டில் பேசிய அண்ணாமலை அவர்கள் அவருடைய சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம் அல்லது என்னிடத்திலேயே நேரடியாக பேசியிருக்கலாம். ஒரு தேசிய கட்சியினுடைய மாநில தலைவர் நேர்மையாக பேச வேண்டாமா. அதே போல சட்டமன்றத் தொகுதியிலே செயல்பாடு இல்லை என்றும் பேசி இருப்பதில் உண்மை இல்லை என்பதை திருச்செங்கோடு பாஜக உறுப்பினர்களே அறிவார்கள்.

திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைப்பதை பற்றி பேசி இருக்கிறார். திருச்செங்கோட்டிற்கு ரோப் கார் என்பது சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைக்க முடியுமா என்பதை ஒரு குழு ஆய்வு செய்து சாத்திய கூறு இல்லை என்பதை அறிவித்த பின் இந்து சமய அறநிலையத்துறை மாற்று சாலையை அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையிடம் கருத்துரு அனுப்பி இருக்கிறது. 

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

இது நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தற்போது இருக்கிறது. திருமணிமுத்தாறு திட்டம் 10236 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வில் இருக்கிறது. என்ன நடந்திருக்கிறது என்று தெரியாமல் மக்களிடம் பொய் சொல்வது நியாயமா? இந்த அரசு அமைந்த பின்னால் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் கீழ்கண்ட பணிகள் நடந்து இருப்பது உங்களுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பியவர், தனது தொகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். ஒரு சில பணிகளை நான் பட்டியலிட்டு இருந்தாலும் இன்னும் பல்வேறு பணிகள் தொகுதி முழுவதும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது, நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

பல திட்டங்கள் நிறைவேற்றம்

 சட்டமன்றத்தில் திருச்செங்கோடு தொகுதிக்கு மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்திற்கும் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க தேவையான பல்வேறு பொது விஷயங்களையும் பேசி இருக்கின்றேன். எதுவுமே தெரியாமல் திருச்செங்கோட்டிலே வந்து பொய்யான கருத்துக்களை பேசி இருப்பது நியாயமா? இன்னும் பல விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. என்னுடைய செயல்பாடுகளை கேள்வி கேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை இருக்கிறது.

நேருக்கு நேர் விவாதிக்கு தயாரா.?

அதே சமயம் பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. அதற்காக என்னுடைய சட்டமன்ற உரைகளைப் பற்றியும் சட்டமன்ற உறுப்பினராக என் செயல்பாடுகள் பற்றியும் திரு அண்ணாமலை பத்திரிகையாளர்கள் முன்பு என்னோடு விவாதிக்க தயாரா? தேதியையும், நேரமும், இடமும் குறிப்பிடுங்கள் விவாதத்திற்கு நான் தயார் என ஈஸ்வரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

எதிர்ப்புக்கு மத்தியில் தேவர் குரு பூஜை விழாவிற்கு செல்லும் எடப்பாடி.! உச்ச கட்ட பாதுகாப்பில் பசும்பொன்

click me!