கறந்தபால் மடிபுகாது, கருவாடு மீன் ஆகாது... திமுகவால் நீட்டை ரத்து செய்ய முடியாது..! சீறும் ஆர்.பி உதயகுமார்

By Ajmal Khan  |  First Published Aug 24, 2023, 12:28 PM IST

 கடல் வற்றி ,மீன் கருவாடாகி, காத்திருக்கும் கொக்கை போல், ராகுல் என்றைக்கு பிரதமராக வருவது,  நீட்டை எப்போது ரத்து செய்வது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 


புரட்சி தமிழர் பட்டம்-கொண்டாட்டம்

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித்தமிழர் பட்டம் வழங்கியதையொட்டி ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான் 3 வெற்றி பெற்றதை தொடர்ந்து கேக் வெட்டும் நிகழ்ச்சியும்  மதுரை காமராஜர் சாலை உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்,  தமிழக மக்களுக்கு பல்வேறு புரட்சிகரமாக திட்டங்களை தந்ததால் எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்த பட்டத்தை வழங்கிய மதுரை மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Tap to resize

Latest Videos

பச்சை பொய் பேசும் திமுக

நிலவில் சந்திரயான் 1 யை மயில்சாமி என்ற தமிழர் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து சந்திரயான் 2யை வனிதா என்ற தமிழர் அனுப்பினார். தற்போது சந்திரயான் 3யை நிலவில்  அனுப்பிவெற்றி பெற்றுள்ளது அதை விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழர் வீர முத்துவேல் அனுப்பி இன்றைக்கு உலக பெருமையை தமிழகத்திற்கு கிடைக்க செய்து உள்ளார்கள் என தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ரத்து செய்யும் கையெழுத்தை போடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது பச்சைப் பொய் பேசுகிறார்கள். இதே எடப்பாடியார் காலத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு பெறவேண்டும் என்று 7.5: சகவீத இட ஒதுக்கீட்டை  பெற்றுக் கொடுத்தார் .மேலும் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்று தந்தார். 

திமுகவால் நீட் ரத்து செய்ய முடியாது

ஆனால் இன்றைக்கு திமுக பச்சை பொய் பேசுவதை வாழ்க்கையாகவும், அரசியல் கடமையாகவும் கூறிவருகிறது. கறந்த பால் மடிபுகாது ,கருவாடு மீனாகாது, காகித பூ மணக்காது என்பது போல் திமுக நீட் ரத்து செய்ய முடியாது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.  நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி உள்ளனர், தற்போது ராகுல் பிரதமர் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வர் என்ற ரகசியத்தை கூறுகிறார்கள். கடல் வற்றி ,மீன் கருவாடாகி, காத்திருக்கும் கொக்கை போல், ராகுல் என்றைக்கு பிரதமராக வருவது,  நீட்டை எப்போது ரத்து செய்வது. இப்படி பச்சைபொய் பேசுவது ஏமாற்று நாடாகும் இதில் உண்மை இல்லை.


அனைத்து தாய்மார்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுகவினர் கூறினார்கள் ஆனால் இதற்கு என்ன பட்டம் பெயர் சூட்டிக் கொள்ளட்டும் ஆனால் அனைத்து தாய்மார்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் இதுதான் எடப்பாடியாரின் கோரிக்கை இதை கூட அதிமுக மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என ஆர் பி உதயகுமார் கூறினார்.

இதையும் படியுங்கள்

ஓமந்தூரார் மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாற்றபடாது..! மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு

click me!