ஓமந்தூரார் மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாற்றப்படாது..! மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு

Published : Aug 24, 2023, 11:50 AM ISTUpdated : Aug 24, 2023, 11:53 AM IST
ஓமந்தூரார் மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாற்றப்படாது..! மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு

சுருக்கம்

நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் போதிய குடிநீர் வசதி சுத்தமாக இல்லை, விளைநிலத்தில் மருத்துவக் கல்லூரியை கட்டிவிட்டு சீக்கிரம் திறக்க முடியவில்லை என்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், இது ஒரு கேலி கூத்தானது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். 

நவீன மருத்துவ உபகரணம்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூபாய் 8.72 கோடி மதிப்புடைய நவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ எந்திரம் மற்றும் ரூபாய் 3.94 கோடி மதிப்பிலான குடல், இரைப்பை உள்நோக்கி கருவி என மொத்தம் ரூபாய் 12.66 கோடி மதிப்புள்ள நவீன உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்காக   சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழ்நாட்டு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை பல்வேறு உயர் சிகிச்சை உபகரணங்கள் கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் தொடர்ச்சியாக பொருத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ கல்லூரி- குடிநீர் வசதி இல்லை

ஏற்கனவே அல்ட்ரா ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே உள்ளிட்டவை உள்ளது. அடுத்கட்டமாக 8.72 கோடி மதிப்புடைய நவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ எந்திரம் பயன்பாட்டுக்கு தமிழ்நாட்டில் முதல் முறையாக வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் இந்திய அளவில் எந்த மாநில அரசிலும் இல்லாத எந்த தனியார் மருத்துவமனையிலும் இல்லாத double ballon endoscopy கருவி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் தொடரபான கேள்விக்கு பதில் அளித்த அவர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரியில் போதிய குடிநீர் வசதி சுத்தமாக இல்லை, விளைநிலங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளது, இதுதான் மருத்துவக் கல்லூரியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். 

அதிமுக ஆட்சி கோமாளித்தனமான ஆட்சி

நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் ஆயிரம் அடி தோண்டினாலும் நிலத்தடி நீர் வராத இடத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தேர்வு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.  இதே போல  நாமக்கல் மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி கட்டி திறந்து விடப்பட்டுள்ளது. மருத்துவமனை திறக்க வேண்டும் என்றால் காவிரியில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும், பொதுப்பணித்துறை முறையாக மண் பரிசோதனை செய்யவில்லை, கூடுதலாக 9 கோடி ரூபாய் செலவு செய்து காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது, கோமாளித்தனமாக ஆட்சி நடத்தி விட்டு இப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள் என்று அதிமுகவை விமர்சனம் செய்தார். 

தலைமைசெயலகம் ஓமந்தூராருக்கு மாற்றப்படாது

இதனை தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாறுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனை என்ற பெயரளவில் மட்டும் இருந்ததை இந்த ஆட்சியில் தான் பல சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டது. இருதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவை அதிகம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பை விட ஒரு நாளுக்கு 2000த்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர் என்றும் ஓமந்தாரார் மருத்துவமனை ஒரு காலத்திலும் தலைமை செயலகமாக மாறாது. எடப்பாடி பழனிச்சாமியிடம் தைரியமாக சொல்லலாம் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

என்னுடைய உடல் நிலை குறித்து வெளியாகும் தகவலை நம்ப வேண்டாம்..! தொண்டர்களை நாளை சந்திப்பேன்- விஜயகாந்த் அதிரடி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி