பொன்முடிக்கு செக் வைத்த அமலாக்கத்துறை..! கவுதம சிகாமணி மீது 90 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதிரடி

By Ajmal Khan  |  First Published Aug 24, 2023, 8:44 AM IST

செம்மண் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி வீடுகளில் சோதனை நடத்திய நிலையில், 90 பக்க குற்றப்பத்திரிகைகயை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  
 


பொன்முடி மீதான முறைகேடு வழக்கு

கடந்த திமுக ஆட்சி காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக தனது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்களுக்கு செம்மண் குவாரி வழங்கியதாகவும், இதன் மூலம்  சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத இந்திய பணங்களும், வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கியது,

Latest Videos

undefined

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்கத்துறை

இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பொன்முடியை அழைத்து சென்று இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி திமுக எம்பி கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள  90 பக்க குற்றப்பத்திரிகையில் செம்மண் குவாரி முறைகேடு மூலம் ஏற்பட்ட இழப்பு, அதிகாரத்தை பயன்படுத்தி டெண்டர் வழங்கியது குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிக்கை காரணமாக அமைச்சர் பொன்முடிக்கு நெருக்கடி கொடுத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மாஜி எம்.பி..! முக்கிய பொறுப்பு வழங்கி அதிரடி காட்டிய பாஜக தலைமை
 

click me!