தமிழகத்தை இருளில் மூழ்கடித்து விட்டு தன் வீட்டு பிள்ளைக்கு முடிசூட்டு விழா..! ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

Published : Dec 15, 2022, 08:01 AM IST
தமிழகத்தை இருளில் மூழ்கடித்து விட்டு தன் வீட்டு பிள்ளைக்கு முடிசூட்டு விழா..! ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

சுருக்கம்

திமுக ஆட்சியில் நிதியும் இல்லை, நீதியும் இல்லை,நேர்மையும் இல்லை, சத்தியம் இல்லை, தமிழகத்தை இருளில் மூழ்கடித்து தன் வீட்டு பிள்ளைக்கு முடிசூட்டி விட்டு தாய் தமிழ்நாட்டு பிள்ளைகளை கைவிட்டார் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம்  ஒன்றிய கழகத்தின் சார்பில் உச்சபட்டியில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ,விலைவாசி  உயர்வை கண்டித்து, மக்களோடு மக்களாக மழையில் நனைந்து கொண்டு அரசின் காதில் செல்லும் வகையில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடியார் நடத்தினார். தமிழகத்தில் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் எடப்பாடியார் என்று மக்களே பேசிக் கொள்கின்றனர். இப்படியே திமுக  சென்றால் மக்கள் நடமாடுவதற்கும்  வரி விதித்து விடுவார்கள்.

நீங்க அமைச்சரானால் அரசாங்கம் உங்களுடையது அல்ல.. உதயநிதியை எச்சரிக்கும் அமர் பிரசாத் ரெட்டி..!

 எதிர்க்கட்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியை புறக்கணித்து வருகின்றனர். ஏதாவது திட்டம் குறித்து கேட்டால் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். இந்த திமுக ஆட்சியில் நிதியும் இல்லை, நீதியும் இல்லை, சத்தியம் இல்லை, நேர்மையும் இல்லை என விமர்சித்தார்.  கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்காக திட்டங்களை பாரபட்சம் இன்றி வழங்கினோம். குறிப்பாக  2011 ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் கூட திமுக  இல்லை. அப்போது கூட பாரபட்சம் பார்க்காமல் மக்கள் நலனை திட்டங்களை செயல்படுத்தினோம். சட்டமன்றத்தில் மக்களின் குறைகளை பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் அமைச்சர்கள் உதயநிதியை பற்றி 20 நிமிடம், ஸ்டாலினை பற்றி 10 நிமிடம் என்று குடும்ப வாழ்ந்துபா பாடுகின்றனர்.

ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்த மானிய கோரிக்கைகள், 110 விதிகள் கீழ் அறிக்கைகள் ,உறுதிமொழிகள், கவர்னர் உரைகள் என 10,000 க்கும் மேல் திட்டங்களை அறிவித்தும்  எதையும் நிறைவேற்றவில்லை. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராய் இருந்தபோது ,தேர்தல் பிரச்சாரத்தில் முதியோர் உதவித் தொகையை 1,500  ரூபாய் உயர்த்தி வழங்கும் என்று கூறினார் .ஆனால் தமிழகம் முழுவதும் குறைத்து வருகின்றனர் கருணாநிதி ஆட்சி காலத்தில் இந்த திட்டத்திற்காக 1200 கோடி தான் ஒதுக்கப்பட்டது ஆனால் அம்மா ஆட்சி காலத்தில் 4200 கோடி ஒதுக்கப்பட்டது இதன் மூலம் 3000 கோடி அளவில் இந்த திட்டத்துக்காக ஒதுக்கினோம்.

பாவம் சும்மா விடாது.!! முதல்வர் மு.க ஸ்டாலின் சாதனை இதுதான்.!! கொந்தளித்த எஸ்.பி வேலுமணி

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி இப்படி மன்னராட்சி தமிழகத்தில் மலர செய்துள்ளார் ஸ்டாலின். ஆனால் இன்றைக்கு  உலக அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண தொண்டர் முதலமைச்சராக வர முடியும் என்ற வரலாற்றை படைத்த கட்சி அதிமுக. அதை படைத்தவர் எடப்பாடியார் ஆவார்.அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட முதலமைச்சராக முடியும் என்ற வரலாற்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதுதான் உண்மையான ஜனநாயகம். தமிழகத்தை இருளில் மூழ்கடித்து தன் வீட்டு பிள்ளைக்கு முடிசூட்டி விட்டு, தாய்தமிழ் நாட்டு பிள்ளைகளை கைவிட்டார் ஸ்டாலின். நாங்கள் ஜனநாயக ஆட்சி மலர  பாடுபட்டு வருகிறோம். ஆனால் இன்றைக்கு மன்னராட்சி ஒழித்தும் கூட புறவழியில் மன்னர் ஆட்சியை திமுக அமைத்து வருகிறது. இதற்கா மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள்? என ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்

இதையும் படியுங்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடலாம்.. உதயநிதி ஸ்டாலின் நடிக்க கூடாதா ? விஷால் கொடுத்த பதிலடி !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!