திமுகவின் சுயமரியாதை உதயநிதி காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது… சிவி.சண்முகம் ஆவேசம்!!

By Narendran S  |  First Published Dec 15, 2022, 12:21 AM IST

உதயநிதி மக்களுக்காக அல்லது திமுகவிற்காக சிறைக்கு சென்றிருக்கிறாரா அல்லது போராட்டத்தில் கலந்து இருக்கிறாரா என்று சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 


உதயநிதி மக்களுக்காக அல்லது திமுகவிற்காக சிறைக்கு சென்றிருக்கிறாரா அல்லது போராட்டத்தில் கலந்து இருக்கிறாரா என்று சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், திமுகவினர் குடும்ப அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள். உதயநிதி என்ன செய்து இருக்கிறார், இந்த நாட்டுக்கு மக்களை விடுங்கள் திமுகவிற்கு என்ன செய்திருக்கிறார். இவர் சிறைக்கு சென்றிருக்கிறாரா போராட்டத்தில் கலந்து இருக்கிறாரா? யார் இந்த உதயநிதி?

இதையும் படிங்க: மாணவர் அணியை பலப்படுத்தும் திமுக.!! தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகள்.!! முழு விபரம் இதோ !!

Tap to resize

Latest Videos

ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக நடிகைகளுக்கு பின்னால் சுற்றிக் கொண்டிருந்தவர். இந்த உதயநிதி நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரைக்கும் சென்றவர் இந்த உதயநிதி. இதுதான் திமுகவின் சுயமரியாதையா? திமுகவின் சுயமரியாதை உதயநிதி ஸ்டாலின் காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது.  துரைமுருகன், பொன்முடியும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் எனக் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: பாவம் சும்மா விடாது.!! முதல்வர் மு.க ஸ்டாலின் சாதனை இதுதான்.!! கொந்தளித்த எஸ்.பி வேலுமணி

எங்கே போனது இவர்களின் பெரியாரின் கொள்கை, சுயமரியாதை கொள்கை? ஜி ஸ்கொயர் நிறுவனம் தமிழகத்தில் நிலங்களை அபகரித்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய உரத்தை மத்திய அரசாங்கம் கொடுக்கின்ற மானியத்தில் வாங்கி தமிழ்நாடு அரசு தனியார் கடைகளுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறது. மின்சார கட்டண உயர்வு பால் கட்டண உயர்வு 12 ரூபாய் இந்த அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்று மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். 

click me!