அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு வாழ்த்துகள் குவிந்து வந்தாலும் மற்றொரு புறம் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
உதயநிதி அவர்களே, நான் அமைச்சர் ஆயிட்டேன், நான் தான் அரசாங்கம், நான் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைத்து விடக்கூடாது என பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் - திருவ்வல்லிக்கேணி எம்.எல்.ஏ.வும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிராமணம் செய்து வைத்தார். திமுகவின் 35வது அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்புத்திட்டங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- திமுகவின் சுயமரியாதை உதயநிதி காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது… சிவி.சண்முகம் ஆவேசம்!!
இந்நிலையில், அமைச்சராக பதவியேற்ற உடனேயே தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு வீரர்களின் நலனிற்காகவும் மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு வாழ்த்துகள் எந்தத அளவுக்கு குவிந்து வந்தாலும் மற்றொரு புறம் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், எங்களிடம் அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறது அதற்கு பெயர் தான் "அண்ணாமலை என உதயநிதியை எச்சரிக்கும் பாணியில் அமர் பிரசாத் பதிவிட்டுள்ளார்.
உதயநிதி அவர்களே, நான் அமைச்சர் ஆயிட்டேன்,
நான் தான் அரசாங்கம்,
நான் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைத்து விடக்கூடாது.
எங்களிடம் அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறது அதற்கு பெயர் தான் "அண்ணாமலை".🔥🔥🔥
இதுதொடர்பாக பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- உதயநிதி அவர்களே, நான் அமைச்சர் ஆயிட்டேன், நான் தான் அரசாங்கம், நான் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைத்து விடக்கூடாது. எங்களிடம் அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறது அதற்கு பெயர் தான் "அண்ணாமலை என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- அடுத்தவன் என்றால் சனாதனம் மூடநம்பிக்கை! தனக்குனா சுபமுகூர்த்தம் நல்ல நேரம்! உதயநிதியை வச்சு செய்யும் கஸ்தூரி