தனியார் நிறுவன பெண் ஊழியர் பலாத்காரம், 6 பெண்களை ஏமாற்றிய, காதல் ரோமியோ காசி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 26, 2021, 12:34 PM IST
Highlights

ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காசி கைது செய்யப்பட்டார்.
 

தமிழகம் உட்பட பல்வேறு மாநில பெண்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் பழகி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட வழக்குகளில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள காதல் ரோமியோ காசி மீது நாகர்கோவில்  நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று மூன்றாவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். 

தமிழகம் கேரளா கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு காதலிப்பதாக கூறி நாடகமாடி அவர்களுடன் தனிமையில் இருந்து ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய தோடு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காசி கைது செய்யப்பட்டார். 

தொடர்ந்து அடுத்தடுத்து 6 பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பெண்கள் வன்கொடுமை, குண்டர் சட்டம், கந்து வட்டி கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே காசி மீது இரண்டு குற்றப் பத்திரிகைகளை நாகர்கோவில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவரை காதலிப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய வழக்கில் காசி மீது இன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் மூன்றாவதாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

காசி வழக்கில் அவரது தந்தை மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டில் இருக்கும் மற்றொரு நண்பரையும் கைது செய்யும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டால் இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

click me!