முருகனை வைத்து யார் வேஷம் போடுகிறார்கள் என்பது தேர்தலின் போது தெரியும்.. எல்.முருகனுக்கு கனிமொழி பதிலடி.

By Ezhilarasan BabuFirst Published Jan 26, 2021, 12:17 PM IST
Highlights

முருகனை வைத்து யார் வேஷம் போடுகிறார்கள் என்பது தேர்தலின் போது தெளிவாக தெரிய வரும் எனவும்,  ஏனென்றால் வெற்றி பெற்ற வீரருக்கே பொய் காசு கொடுப்பவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளீர் அணிச்செயலாளருமான கனிமொழி தெரிவித்துள்ளார். 

முருகனை வைத்து யார் வேஷம் போடுகிறார்கள் என்பது தேர்தலின் போது தெளிவாக தெரிய வரும் எனவும்,  ஏனென்றால் வெற்றி பெற்ற வீரருக்கே பொய் காசு கொடுப்பவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளீர் அணிச்செய லாளருமான  கனிமொழி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இரண்டாவது நாளாக விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுகவின் மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி சிவகங்கையில் வீரமங்கை இராணி வேலு நாச்சியார் மற்றும் தற்கொலைப் படை போராளி குயிலியின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்க சரியான பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர். ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்றார். அப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக நினைத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அவமானப்படுத்தபடுவதை, வன்முறைக்கு உள்ளாக்கப் படுவதை தடுக்க முடியும். ஆனால் அவர்கள் அதனை செய்யாமல் வெறும் கண்டனத்தை மட்டும் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றார். 

அதேநேரத்தில் திமுக எதை செய்தாலும் அதனை விமர்சனம் செய்ய வேண்டும், பொய் பிரச்சாரம் என்று சொல்ல வேண்டும், என்பதையே அதிமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஸ்டாலினுக்கு வேல் பரிசு கொடுக்கப்பட்டதை பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி. முருகனை வைத்து யார் வேஷம் போடுகிறார்கள் என்பது தேர்தலின் போது தெளிவாக தெரிய வரும் என்றும்,ஏனென்றால் வெற்றி பெற்ற வீரருக்கே பொய் காசு கொடுப்பவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அவர் பதிலடி கொடுத்தார். 
 

click me!