சர்க்கரை அளவு நார்மல்... எழுந்து நடமாடும் சசிகலா... உடல்நிலையில் அதீத முன்னேற்றம்..!

Published : Jan 26, 2021, 12:13 PM IST
சர்க்கரை அளவு நார்மல்... எழுந்து நடமாடும் சசிகலா... உடல்நிலையில் அதீத முன்னேற்றம்..!

சுருக்கம்

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விக்டோரியா அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. சசிகலா ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98 சதவீதத்தில் இருந்து 97 சதவீதமாக குறைந்துள்ளது. சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. 

மேலும், அறிகுறிகள் இல்லாத நிலையில் சசிகலாவுக்கு தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு 178ஆக உள்ளதால் சசிகலாவை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடங்களாக சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் சசிகலா நாளை விடுதலையாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!