டாஸ்மாக் கடைகளுக்கு சென்று அங்கு வருபவர்களிடம் ஓட்டு கேட்கப்போகிறோம்.. திமுக மா.செ புது டெக்னிக்.

By Ezhilarasan BabuFirst Published Jan 26, 2021, 12:00 PM IST
Highlights

வரும் சட்டமன்ற தேர்தலில் மதுபானக கடைக்கு சென்று அங்கு வருபவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போவதாக திமுக மாவட்டச் செயலாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

வரும் சட்டமன்ற தேர்தலில் மதுபானக கடைக்கு சென்று அங்கு வருபவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போவதாக திமுக மாவட்டச் செயலாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் திமுக சார்பில்  மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட  அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட செயலாளருமான  கே. கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது. 

 

அதிமுக  மதுபானக் கடைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துவருகிறது. கடைகளை மூடுகிறோம் என கூறிவந்த நிலையில்,  100% மதுபான கடைகளை திறந்து விட்டது. மதுபானக்கடைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கும், சினிமா திரையரங்குகளை  திறப்பதற்கும் முன்னுரிமை தர தவறிவிட்டது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதற்கு பதிலாக ஒவ்வொரு மதுபானக் கடையில் வாசல் முன்பு அமர்ந்து அங்கு வரும் குடிமகன்கள் இடம்  ஓட்டு கேட்கப் போகிறோம். 

ஏனென்றால் அங்குதான் தமிழகத்திலுள்ள அனைத்து ஆண்களும் மது அருந்த வருகிறார்கள். அதனால் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பதைவிட மதுபான கடை முன்பு ஓட்டு கேட்கலாம், வேலை இலகுவாக முடிந்துவிடும் என்று கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.  

 

click me!