பேரரசின் வரலாற்றை தாங்கி நின்ற மோடியின் தலைப்பாகை.. குடியரசு தினத்தில் மனிதநேயத்திற்கு பிரதமர் செய்த மரியாதை

By Ezhilarasan BabuFirst Published Jan 26, 2021, 11:20 AM IST
Highlights

அப்போது ரஃபேல் போர் விமானங்கள் டி-90 டாங்கிகள், சுகோய்-30 விமானங்கள். எம்.கே.ஐ போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்தி காட்டின.முன்னதாக பிரதமர் மோடி நாட்டின் 72வது குடியரசு தின வாழ்த்துச் செய்தியாக நாட்டுமக்களுக்கு ஜெய்கிந்த் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.  

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்திய திருநாட்டின் குடியரசு விழா தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இக்கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக போர் நினைவு சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணமடைந்த வீரர்களுக்கு  பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதை வந்தார். அவரை முப்படை தளபதிகள் வரவேற்றனர்.  அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ராஜபாதைக்கு வருகை தந்தார். அதைத்தொடர்ந்து குதிரைப்படை அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்தார் .அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பின் முப்படைத் தளபதிகளை ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி. அதன்பின்னர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  இந்த குடியரசு தினம் சிறப்பு விருந்தினர் இல்லாமல்  நடந்து முடிந்துள்ளது.

அப்போது ரஃபேல் போர் விமானங்கள் டி-90 டாங்கிகள், சுகோய்-30 விமானங்கள். எம்.கே.ஐ போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்தி காட்டின. முன்னதாக பிரதமர் மோடி நாட்டின் 72வது குடியரசு தின வாழ்த்துச் செய்தியாக நாட்டுமக்களுக்கு ஜெய்கிந்த் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். வழக்கமாக பிரதமர் மோடி, ஒவ்வொரு குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் சுதந்திர தின விழாவின் போதும் பிரத்தியேகமான தலைப்பாகையை அணிந்து வருவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் குடியரசு தின விழாவிலும் அவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க பேரரசின் நினைவாக  தலைப்பாகை அணிந்து இருந்தார். அவர் அணிந்திருந்த தலைப்பாகைக்குப் பின்னால், இந்திய நாட்டின் செல்வச் செழிப்பு மிக்க, மனித நேயம் மிக்க ஒரு பேரரசின் வரலாறு புதைந்துள்ளது. அதை எடுத்துக்காட்டும் விதமாகவே அவர் தலைப்பாகை அணிந்து இருந்தார். அவர் அணிந்திருந்த தலைப்பாகை ஜாம்நகர் அரச குடும்பத்தினரால் அவருக்கு பரிசாக வழங்கியது அகும்.

 

ஜாம்நகரின் அரச குடும்பத்திற்கு உலகளவில் சிறப்பு மரியாதை உண்டு. ஜாம்நகர் மகாராஜாவின் மன்னர் ஜாம் சாஹேப் திக்விஜய் சிங் ஜி 2 ஆம் உலகப் போரின்போது போலந்திலிருந்து 1000 குழந்தைகளை காப்பாற்றி குஜராத் மாநிலம் ஜாம்நகர் கொண்டுவந்து வளர்த்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய ஒரு சிறந்த மாமனிதர் ஆவார். 

ஜாம்நகரின் முந்தைய மன்னரின் இந்த மனிதநேயத்தை பாராட்டி போலந்து நாட்டு மக்கள் அவரை இன்னும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 2016 ஆம் ஆண்டில், ஜாம் சாஹேப் இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு, போலந்தின் நாடாளுமன்றம் ஏகமனதாக உலகப் போரின்போது போலந்து குழந்தைகள், அகதிகளுக்கு உதவியதற்காக ஜாம் சாஹேப் திக்விஜய் சிங்ஜியை கவுரவித்து சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

போலந்தில் உள்ள அகதிகளும் ஜாம்நகரை ‘லிட்டில் போலந்து’ என்று அன்பாக அழைத்து மன்னர் திக்விஜய் நினைவை போற்றி வருகின்றனர். இந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க மன்னர் குடும்பத்தால் பரிசளிக்கப்பட்ட தலைப்பாகையை இன்று மோடி அணிந்திருந்தது தனிச்சிறப்பாகும்.  

 

click me!