எனது மூச்சு இருப்பதற்குள் கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும்... இயலாமையில் துடித்த ராமதாஸ்.

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2021, 4:53 PM IST
Highlights

பாமக மீது உங்களுக்கு அப்படி என்னய்யா ஜாதி வெறி? எதிர்வரும் தேர்தலில் ஒவ்வொரு மாற்று சமுதாயத்தினர் வீட்டிற்கும் சென்று ஒவ்வொரு சாதியினரையும் சந்தித்து பாமகவுக்கு ஆதரவு கேட்க வேண்டும்.

யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் ஆனால் பாமக மட்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என ஊடகங்கள் சாதிவெறியோடு கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றது என்றும், எனது மூச்சு இருப்பதற்குள், அன்புமணியை கோட்டையில் உட்கார வைத்துவிடுங்கள் என பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் உருக்கமாக பேசியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் கடந்த 16ஆம் தேதி பாமகவின் பொதுக்குழு கூட்டம்  இணைய வழியில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அவர், எனக்கு இருக்கிற வேதனை கொஞ்ச நஞ்சமல்ல, மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன். நாம் வலுவாக இருக்க கூடிய மாவட்டங்களில்கூட நம்மால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற முடியவில்லை. அப்படி என்றால் 40 ஆண்டுகாலம் நாம் என்ன கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று வேதனையாக இருக்கிறது. நீங்கள் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு போனால் உங்களுக்கு காசு கொடுப்பார்கள், அதை வாங்கிக்கொண்டு என்ன செய்வீர்கள், இந்தக் காட்சியில் இருக்கிற மரியாதை உங்களுக்கு கிடைக்குமா? கிராமத்தில் ஒன்று சொல்வார்கள், பிள்ளை பிடிக்கிறவர்கள் வருகிறார்கள் என்று, அதுபோல சில கட்சிகள் ஊர்ஊராக ஆட்களை பிடிக்க வருகிறார்கள், நீங்கள் வேறு கட்சிக்கு போனால் உங்களை கொம்பு சுழி போட கூட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். 

இதையும் படியுங்கள்: எப்படியாவது மத வெறுப்பை உருவாக்கி வெறுப்பு அரசியல் செய்ய பாஜக துடிக்கிறது.. பயங்கரமாக எச்சரித்த தயாநிதி மாறன்.

அத்தோடு உங்களது அத்தனை உழைப்பும் முடிந்தது  என்று வைத்துக் கொள்ளுங்கள், 20 வருடம் 40 வரும் காட்சிக்கு உழைத்த உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும், மானம் உள்ளவன், சூடு உள்ளவன், சொரணை உள்ளவன் வன்னியன். வன்னியனுக்கு பிறந்தவர்கள் அதுபோல கட்சி மாறி போவீர்களா? மாறி ஓட்டு போடுவீங்களா? அவன் கூப்பிடுகிறான், இவன் கூப்பிடுகிறான் என்று இன்னொரு கட்சியுடன் போவீங்களா? எங்கே போனது உங்கள் வீரம், வீரத்தை அடமானம் வைத்து விட்டீர்களா?

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி ரமேஷை பெயிலில் எடுக்க 40-பேர் கருப்பு அங்கி அணிந்து நீதிமன்றத்தில் நிற்கிறார்கள் அதில் 20 பேர் வன்னியர்கள், நிலைமை இப்படி இருக்கிறது என வேதனைபட்ட அவர், அரசியலில் மாறி மாறி கூட்டணி வைத்தவர்கள் தொடர்பாக ஒரு புத்தகமே எழுதலாம் என்று நினைக்கிறேன், யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், ஆனால் தமிழகத்தில் பாமக மட்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது, நமது பெயரை மட்டும் சொல்லக்கூடாது என்று பலர் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எல்லா ஊடகங்களும் வன்மத்தோடு, ஜாதிய வன்மத்தோடு, ஜாதி வெறியோடு பாமகவை அனுகுகிறார்கள். வன்மத்தோடு தொலைக்காட்சி ஆரம்பித்து பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த தொலைக்காட்சிகள் நமக்கு வைத்த பெயர்கள் என்ன தெரியுமா? மற்றவைகள்... இதுதான் நமது பெயர்.பாமக அதிமுக, திமுக போன்ற கட்சிகளுக்கு பலமுறை உதவி செய்திருக்கிறோம், கலைஞருக்கு நிபந்தனையற்ற ஆதரவை ஐந்தாண்டுகள் கொடுத்தோம், ஆனால் பமக ஆட்சிக்கு வரமுடியவில்லை,

இதையும் படியுங்கள்:  இந்தி படிக்க சொன்ன ஊழியரை வேலைய விட்டே தூக்கிட்டோம்.. தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட சொமேட்டோ நிறுவனம்.

இனிமேல் பாமக தலைமையில் தான் கூட்டணி அமையும், அதிமுக திமுக தலைமையில் இருக்காது, எந்தக் கட்சியாக இருந்தாலும் பாமக தலைமையில்தான் இனி கூட்டணி அமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மாநாடுகள் நடத்தி பாமக உரிய அங்கீகாரம் பெறும், ஒரு கட்சி பாமகவை மரவெட்டி கட்சி என்றது, இன்னொரு கட்சி பாமகவே அழிந்துபோக வேண்டும் என்றது, நான் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன், நான் இன்னும் ஒருநாள் அங்கு இருந்திருந்தால் நான் இறந்து போயிருப்பேன், ஆனால் அவர்கள் எல்லாரையும் நாம் ஆதரவு கொடுத்து நிலை நிறுத்தினோம். இவ்வளவும் செய்த பாமகவுக்கு ஒருமுறை ஆட்சியை கொடுங்கள் என்று பாமக தமிழ்நாட்டு மக்களை பலமுறை கேட்டு விட்டது. எத்தனையோ முறை கொஞ்சிவிட்டோம். அன்புமணி எத்தனை முறை கெஞ்சிபார்த்துவிட்டார். ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டார், ஆனாலும் வாய்ப்பு இல்லை.  

பாமக மீது உங்களுக்கு அப்படி என்னய்யா ஜாதி வெறி? எதிர்வரும் தேர்தலில் ஒவ்வொரு மாற்று சமுதாயத்தினர் வீட்டிற்கும் சென்று ஒவ்வொரு சாதியினரையும் சந்தித்து பாமகவுக்கு ஆதரவு கேட்க வேண்டும். நானும் வருகிறேன், நான் ஒரு பக்கம், அன்புமணி மறு பக்கம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறோம், ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று காலில் விழுந்து கையில் விழுந்தாவது எனது மூச்சு இருப்பதற்குள் அன்புமணியை கோட்டையில் அமர வையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!