பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது.. திமுகவை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி.!

By vinoth kumarFirst Published Oct 19, 2021, 4:06 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்த செய்யப்படும் என பொய்யான வாக்குறுதியை ஸ்டாலின் அளித்தவர். அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை ரிப்பன் வெட்டி ஸ்டாலின் திறந்துவைத்துக் கொண்டிருக்கிறார். கொரோனாவுக்கு என்ன சிகிச்சை என்றே தெரியாத நேரத்திலேயே அதிமுக ஆட்சியில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. 

உள்ளாட்சி தேர்தலில் திமுக ஜனநாயக முறையில் வெற்றி பெறவில்லை. முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் அதிமுக பொன்விழாவையொட்டி கட்சி கொடியை இணை ஒங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றிவைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- மக்களுக்காக மாபெரும் திட்டங்களை தீட்டிய இயக்கம் அதிமுக. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். நாட்டிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வியில் முதலிடம் வகிப்பதற்கு அதிமுக ஆட்சியே காரணம்.

மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய ஒரே அரசு அதிமுக அரசு. மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை அதிமுக அரசு வழங்கியது. அதிமுக பொன்விழா காணும் வேளையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்து சாதனைகளை படைத்துள்ளது. தேர்தலின் போது திமுக தமிழக மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது. நகைக்கடன் தள்ளழுடி என வாக்குறுதி அித்துவிட்டு ஏராளமான நிபந்தனைகளை திமுக அரசு அறிவித்துள்ளது. திமுக அரசின் நிபந்தனைகளால் நகை அடகு வைத்தவர்களில் 5 சதவீத பேர் கூட பயன்பெற மாட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்த செய்யப்படும் என பொய்யான வாக்குறுதியை ஸ்டாலின் அளித்தவர். அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை ரிப்பன் வெட்டி ஸ்டாலின் திறந்துவைத்துக் கொண்டிருக்கிறார். கொரோனாவுக்கு என்ன சிகிச்சை என்றே தெரியாத நேரத்திலேயே அதிமுக ஆட்சியில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியில் கொரோனா தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

உள்ளாட்சி தேர்தலில் திமுக ஜனநாயக முறையில் வெற்றி பெறவில்லை. முறைகேடுசெய்து வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினரை தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்பட்டது. பொய் வழக்குகள் போட்டு அதிமுகவினரை முடக்கிவிட முடியாது. வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அதிமுக அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

click me!