இதெல்லாம் அக்கிரமம்... டாக்டர் ராமதாஸ் கொதிப்பு..!

Published : Oct 19, 2021, 04:47 PM IST
இதெல்லாம் அக்கிரமம்... டாக்டர் ராமதாஸ் கொதிப்பு..!

சுருக்கம்

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகு கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகு கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகை  சிங்களக் கடற்படை கப்பல் மோதி கவிழ்த்துள்ளது.  அதில் மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கி விட்டனர்; அவர்களில் ஒருவர் மாயமாகி விட்டார். சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது!

சிங்களப் படைத் தாக்குதலில் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராஜ்கிரணை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும்  வழங்க அரசு முன்வர வேண்டும்!

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகு கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.  சிங்களக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சுடச்சுட ரெடியாகும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்! கனிமொழி தலைமையில் தயாராக போகும் தேர்தல் நாயகன்!
என் உத்தரவை யாரும் மதிக்கலை... பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்